flashvortex.

Friday, January 6, 2012

தமிழ் படும்பாடு!!!!!!!!!!!

எந்த பாஷையானாலும் சொந்த பாஷையில் படி என்கிறார்கள் மொழி அறிஞர்கள். ஒவ்வொரு இனத்தவரின் தொன்மையையும் அடையாளத்தையும் காட்டி நிற்பது கலாச்சாரமும் மொழியும் மட்டுமே. அந்தவகையில் தமிழனின் கலாச்சாரம்தான் மாறி விட்டது என்றால் இப்பொழுது தமிழ் மொழியில் பிற மொழிக்கலப்பும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.   இதனால் அண்மைக் காலமாக தமிழர் அடையாளமிழந்து வருகின்றனர். தன்னையே மறந்து வேறு ஒன்றாய்க் கிடக்கின்றனர். தாய்மொழியைத் தாழ்த்தி பிறமொழியை உயர்த்துகின்றனர்.

ஆங்கிலவழிக் கல்வியே இன்று பிரதானமாக இருக்கிறது. தாய் மொழியை இரண்டாம் மொழிஇ மூன்றாம் மொழிப் பாடமாகக்கூட பயில்வதற்கு தயங்குகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வேற்று மொழிக் கலப்பின்றி தமிழ் மொழியில் கல்வியை பயிற்றுவிக்க வேண்டும். இன்று தமிழர்கள் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசமுடிவதில்லை. அந்த அளவிற்கு நம்மிடம் சொற்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதில் புதிய சொற்களை பயன்படுத்தமுடியும். நாம் பேசும் போது ஆங்கிலச்சொற்களை அதிகம் பயன்படுத்தினால் மேலானவர்கள் என்ற எண்ணம் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். 


ஆங்கிலேயர்கள் சந்திக்கும் பொழுது தம் மொழியிலேயே உரையாடுகின்றார்கள். அதே போல இந்தியாவில் உள்ள இன மக்கள் தமது மொழியிலேயே உரையாடுகின்றனர் ஆனால் தமிழன் மட்டும் ஏன் தமிழில் உரையாடாமல் ஆங்கிலத்தில் உரையாடகின்றான்?. தமிழனே தமிழை இழிவு படுத்துகின்றான்.

இன்று மொழிதான் இனம் என்பதை அங்கீகரிக்கிறது. நாம் தாய் மொழியை புறக்கணிக்கும்போது இனத்திலிருந்தே வெளியே சென்றுவிடுகிறோம் என்பது மட்டுமல்ல நாம் அடையாளமற்று போய்விடுகிறோம். என்று யாருமே நினைப்பதில்லை.

அவரவர் மொழியில் முதலில் புலமை பெறவேண்டும். ஆங்கிலத்தில் தான் நாம் மருத்துவம் தொழில்நுட்பம் கணனி போன்றவற்றை கற்கிறோம். இப்பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலே கற்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த்த்துக்கு மனிதன் ஆட்படுகின்றான். இதனால் விரும்பியோ விரும்பாமலோ மனிதன் ஆங்கிலத்தில் தன்னை உட்படுத்திக் கொள்கின்றான்.  இதனாலேயே மக்கள் மத்தியில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாகின்றது என்பதும் ஒரு காரணம்.

நாகரீக வளர்ச்சியின் ஆரம்பமே தமிழ் மொழியின் அழிவு......... நாகரீகம் வளர வளர தமிழ் மொழியில் ஆங்கில மொழியின் கலப்பு அதிகமாகிக் கொண்டே இருந்த்து. உதாரணமாக.............ஆரம்ப காலத்தில் பிறந்த குழந்தைகள் அம்மா என்றே தாயை அழைக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோரே அதனை விரும்புவதில்லை. அவர்கள் தமது குழந்தைகள் ம்ம்மி என்று அழைப்பதனையே விரும்புகின்றனர். இதனாலும் தமிழை வளர்க்க வேண்டிய இளம் சமுதாயம் ஆங்கில மொழியை வளர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.  

செய்திகளை பிறமொழி வழியே அறிந்து கொண்டு தமிழராக தன்மொழி வழியே சிந்திப்பதை மறுத்து ஆங்கிலத்தில் படித்து அதிலேயே சிந்தித்து மேலை நாட்டுக்காரர்களாகவே தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

மக்களிடையே ஆங்கில மொழி வளர்வதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் சினிமாவில் தமிழ் மொழியை விட ஆங்கில மொழியின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. ஆரம்ப காலங்களில் வந்த சினிமா படங்களில் தமிழ்மொழிதான் பேசப்பட்டது. அதனால் தான் இன்று வரை அவை காவியமாக நிலைத்து நிற்கின்றது. ஆனால் இப்பொழுது வெளிவரும் படங்களில் தமிழ் அதிகமாக பேசப்படுகின்றதோ இல்லையோ? ஆங்கிலம் அதிகமாக பயன்பட்டு வருகின்றது. 2011ல் வெளிவந்த why this kolaiveri பாடலே சிறந்த உதாரணம். இப் பாடலில் தமிழ் மொழியை விட ஆங்கில மொழியின் வரிகளே அதிகமாக உள்ளது. இதனாலேயே மக்கள் மத்தியில் இப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எத்தனையோ தமிழ் சொற்களை மனிதன் மறந்துவிட்டான்.......... எத்தனை பேருக்கு தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் தெரிந்துள்ளது என்று பார்த்தலே தமிழ் மொழி எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தெரியும். ஆங்கிலமொழி ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதான் அதற்காக எமது தாய்மொழியை தாழ்த்தி ஆங்கிலமொழியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மனிதன் முற்றாக அழிக்க வேண்டும்.

2 comments:

  1. வணக்கம் என் பக்கம், சிறந்த கட்டுரை வாழ்த்துக்கள், தமிழ் பற்று உங்கள் எழுத்தில் இறுக்கமாக இருக்கிறது...
    கலப்பு என்பது தமிழில் தொன்று தொட்டு வருகின்ற ஒரு மரபு. தமிழ் வரலாற்றின் முதல் காலத்தில் வட மொழியில் இருந்து பல நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டது, அதன் காரணத்தினால் பல வட மொழி சொற்களும், கிரந்த எழுத்துக்களும் தமிழுக்குள் மெதுவாக நுழைந்தன. இன்று அவை தமிழா அல்லது வட மொழிய என்று பிரிக்க முடியாத அளவு ஒன்று இணைந்து விட்டன. தமிழன் கலப்பு திருமணம் செய்தது போல தமிழ் மொழியும் கலப்பாகி விட்டது.
    ஆங்கிலேயர் இங்கே வரவில்லை, ஆங்கில மொழி இன்னமும் இங்கே வரவில்லை என்று வைத்துக்கொள்வோம், தமிழன் தமிழை எப்படி பேசி இருப்பான்? என்ன மொழியில் பேசி இருப்பான்? தூய்மையான தமிழில் தனே பேசி இருப்பான், வட மொழிக்கலப்பு தமிழுக்குள் வந்த காலத்தில் எம்மை போல சில சிறிய திப்பொறிகள் குமுறி இருக்கும். காலப்போக்கில் அவை தண்ணீர் ஊற்றி அணைக்க பட்டிருக்கும். இப்போது குமுறும் நாமும் காலப்போக்கில் அணைக்கப்படலாம். வரும் மாற்றங்கள் அனைத்தையும் தமிழ் மொழி தனக்குள் வாங்கிக்கொண்டு தனித்துவம் இழந்து தவிக்கும். இறுதியில் தமிழ் மொழியை அழித்த பெருமை தமிழனையே சாரும்.

    ReplyDelete
  2. நன்றி உருத்திரன்...
    சிறிய தீப்பொறிதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்......
    தமிழை எல்லோரும் வளர்க்க முற்பட்டால் சிறிய தீப்பொறி பெரிய பிழம்பாக மாற்றமடையலாம்........

    ReplyDelete