flashvortex.

Wednesday, August 1, 2012

வீரமாகாளியில் வீரவாள்

 யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சங்கிலிய மன்னன் கடைசி மன்னன் ஆவான். வீரத்துக்கு பெயர் போன மன்னன் என்றால் மிகையாகாது. இம் மன்னனோடு தொடர்பு பட்ட கோயில்களில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலும் ஒன்று.; நல்லூருக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ள இக் கோயிலானது 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

1519ம் ஆண்டு சங்கிலிய மன்னன் யாழ்ப்பாணத்துக்கு அரசனான். அன்று தொடக்கம் யாழ்ப்பாணத்துடன் போர்த்துக்கேயரை தொடர்பினை மேற்க்கொள்ள விடவில்லை என்பது வரலாற்று உண்மை. 1620ம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்தனர். இந்தப்படையெடுப்பை இன்று சங்கிலிய மன்னனே எதிர் கொண்டான். சங்கிலியன் என்னதான் கொடுங்கோல் ஆட்சி செய்தாலும் போர்த்துக்கேயரை கடைசி வரை எதிர்த்து நின்றவன என்பதில் இவன் போற்றப்படுகின்றான். ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயருடனான தொடர்பை தண்டித்தான். போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டு கோட்டை ராசதானிக்கு வந்தாலும் 1543ம் ஆண்டே யாழ்ப்பாணத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது என்றால் சங்கிலிய மன்னனின் வீரத்தினை சொல்லிக் கொள்ள வார்த்தைகள் கிடையாது.
சங்கிலிய மன்னனுக்கும் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்கிலிய மன்னன்போருக்கு செல்லும் போது  வீரமாகாளி இம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து போருக்கு சென்றதாகவும் எல்லா போரிலும் வெற்றி பெற்றதாகவும் கூறுகின்றது வரலாறு.  வீரமாகாளி அம்மன் கோயிலும் சிறப்பு மிக்க கோயில் ஆகும். இக் கோயிலில் நடந்த சுவாரஸ்மான கதை கோயிலின் பெருமையினை எடுத்துக் காட்டும்.
ஒரு காலத்தில் பறங்கியர் கோயில்களை எல்லாம அழித்துக் கொண்டு இருந்த சமயம் இக் கோயிலையும் அழிப்பதற்கு சென்ற வேளை ஆலய முகப்பில் சிங்கம் ஒன்று தோன்றி சடை விரித்துக் கர்ஜித்து பறங்கியரை விரட்டி அடித்து மறைந்துள்ளது. இதனால் இக் கோயிலுக்கு மக்களை பறங்கியர் விடவில்லை என்பது இக் கோயிலுக்கான பதிவுகள்.
இன்றும் இக் கோயிலில் சங்கிலிய மன்னனின் வாள் காணப்படுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். சங்கிலிய மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு யுத்தகளத்துக்கு செல்வது வரலாறு. அவ்வாறு யுத்தகளத்துக்கு செல்லும் முன்னர் கோயிலுக்கு வந்து வணங்கும் போது இரண்டு வாள்களை விட்டு சென்று விட்டதாகவும் அந்த வாள்களில் ஒன்றே தற்போது இக் கோயிலில் இருக்கின்றது. இரண்டு வாள்களில் ஒரு வாள் பற்றிய தகவல் தெரியாமலேயே உள்ளது.
இது தொடர்பாக இவ் ஆலய குருக்கள் தெரிவிக்கையில் மாமன்னன் சங்கிலியனின் வாள்கள் இங்கு இருந்தது.அதில் ஒரு வாள் இன்றும் இருக்கின்றது. ஆனால் மற்றைய வாளை விடுதலைப்புலிகள் தமது அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு கொண்டு சென்று விட்டார்கள். அவர்கள் கொண்டு சென்ற வாள்தான் மிகவும் பழமையானது. எமது மூதாதையர்கள் கழைய வாளை கோயிலுக்கு வைத்துவிட்டு மற்றைய வாளை கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பழமையான வாளே தமக்கு வேண்டும் என்று எடுத்துச் சென்று விட்டனர். தற்போது அந்த வாள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இருக்கிறதா என்று கூட தெரியாது என்று வருத்தத்தோடு தெரிவித்தார்.
சங்கிலிய மன்னன் இன்று இல்லை என்றாலும் அவர் பயன்படுத்திய வாள் இக் கோயிலில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இவ் வாள் நீண்டதாகவும் பாரமானதாகவும் காணப்படுகின்றது. வருடத்தில் ஒரு தடவை மகோற்சவ காலத்தில் வாள் வெட்டு திருவிழாவின் போது மட்டுமே வெளியே எடுக்கப்படுகின்றது. இந்தத் திருவிழாவில ஆலயக் குருக்கள் வாளினை எடுத்து பயன்படுத்துவர்.
எத்தனையோ வருடங்கள் பழமையான இக் கோயிலில் மாமன்னன் சங்கிலியனின் வாள் இன்று மட்டுமல்ல என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.

No comments:

Post a Comment