flashvortex.

Thursday, February 9, 2012

fedruary 14

இந்த உலகத்தில் தந்தையர் தினம் அன்னையர் தினம் ஆசிரியர் தினம் எல்லாம் வருகிறது....ஆனால் இந்த காதலர் தினம் வந்தால் மட்டுமே 10 நாட்களுக்கு முன்னமே இந்த காதலர் தினம் களை கட்டி விடும்......7  வயதில் இருக்கும் குழந்தையில் இருந்து பெரிய வயதில் இருப்பவர்கள் வரை காதலர் தினம் என்றால் தெரியாது என்று சொல்ல யாருமே சொல்லமாட்டர்கள்.



எத்தனை எத்தனையோ 
காதலை சொல்லும் 
காதலர்களுக்கு ஒரு திருவிழா......

சொல்லிய காதல்கள் தான் 
எத்தனையோ......

தினம் சொல்லாமல் 
சோகத்தில் திளைக்கும் 
காதல்கள் தான் 
எத்தனையோ.....

கவிதை எழுத தெரியாதவனுக்கு கூட காதல் வந்தால் கவிதை கவிதையாக எழுதுவார்கள்....காதலிப்பவனுக்கு நண்பனாக இருந்து விட்டால் போதும் அவர்களை போல அந்த நேரம் பாவம் என்று சொல்ல யாருமே இல்லை என்றே கூறலாம்.

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. 


வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.


திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.


காதல்கள் மனிதருக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் உண்டு. மாடப்புறா தனது ஜோடி இறந்து விட்டால் தானும் எப்படியோ இறந்து விடுமாம்...அந்த அளவுக்கு காதல் இருக்கிறது இந்த உலகத்தில்....

காதலிக்க ஆரம்பித்து விட்டால் ஒருவனது நடவடிக்கைகள் மாறிவிடும்....எப்போதும் கண்ணாடிக்கு முன் நின்று தன்னை அழகு படுத்தி கொள்ளுவார்கள்.....யாரும் கவனிக்க விட்டாலும் தன்னை எல்லோரும் பார்ப்பதாக நினைப்பார்கள்........

காதல் ரஜினி மாதிரி எப்பவரும் எப்பிடி வரும் என்று யாருக்கும் தெரியாது ஆனா எல்லோருக்கும் காதல் வரும்.......


ஆதாம் ஏவாள் 
தொடக்கி வைத்த 
உறவே காதல்

ஆரம்ப காலத்தில் காதலர்கள் சந்திப்பது என்றாலே கடினம் அவர்களுக்கு காதல் எட்டாக் கனியாகவே இருந்தது...ஆனால் இன்றைய தலைமுறைக்கு காதல் செல்போனில் facebook ல் அழகாக நடக்கிறது.....

காதலர்கள் எப்போது புரிந்து கொண்டு நடக்க வேண்டும்....சிறு ஊடல் கூட காதலை பிரித்து விடக்கூடாது. அந்த ஊடல் பிரிவிற்கு கொண்டு செல்லாது காதலர்களுக்கிடையே அன்பையும் அன்னியோன்னியத்தையும் வளர்க்கவேண்டும்..............

காதலர் தினத்தில் காதலர் பரிசில்கள் கொடுத்து மகிழ்வார்கள்... ரோஜாபூ, முத்தம் போன்றவற்றை பரிமாறிக்கொள்வார்கள்... சினிமா, பூங்கா, கடற்கரை, போன்ற பல இடங்களுக்கு செல்வார்கள்.

காதலர்களுக்கிடையே பிடிவாதம் இருக்க கூடாது. நீண்ட மௌனங்கள் காதலர்குக்கிடையே பிரிவினை கொண்டு வந்து விடும்.....

வலித்தாலும் காதலே என்பதற்கு சிறு உதாரணம்......

"வலிக்குதடா" என்ற ஒரு வார்த்தை நீண்ட நேரத்தின் பின் தொலைபேசியில்  ஒலித்தது. ஆனாலும் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.... அவளின் ஸ்பரிசம் என்னை சற்று கிறங்க வைத்தாலும் பிடிவாதமாகவே இருந்தேன்.... அவளுக்கு மட்டும் தான் வலிக்குமா? அவள் மட்டும் தான் அழுதாளா? எனக்கும் மனசு இருக்கு..... தன்னால் மட்டுமே பிடிவாதம் பிடிக்க முடியும் என்று நினைத்தாளோ? அவள் மட்டுமா வலியை தேடிக்கொண்டாள்? எனக்கும் சேர்த்து தானே வலியை தந்தாள்......இப்படி காதலில் பிடிவாதமாக இருக்க கூடாது....காதல்களில் விரிசல் ஏற்பட்டாலும் சரி வலித்தாலும் சரி என்றும் காதல் மாறது மனதை விட்டு......


"காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது 
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது"

என்ற பாடல் அருமையாக காதலின் முடிவினை எடுத்துக்காட்டி இருந்தது....காதலர்கள் இறந்தாலும் காதல் என்றுமே இறக்காது......

எல்லோருக்கும் என் காதலர் தின நல் வாழ்த்துக்கள்... 

No comments:

Post a Comment