flashvortex.

Friday, February 10, 2012

சாதனை படைக்கவுள்​ள உலகின் மிக உயரமான கட்டிடம்

உருண்டு ஓடும் உலகில் சாதனைக்கு அளவே இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு சாதனை உலகின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

அதேபோல் இப்பொழுது உலகின் மிகவும் உயரமான கட்டிடம் என்ற சாதனையை அசர்பைஜான் கோபுரம் சொந்தமாக்கவுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 828 மீற்றர் உயரம் கொண்ட பேர்ஜ் கலிபா என்ற கட்டிடமே ஏனைய கட்டிடங்களுக்கு போட்டியாக இருந்தது. ஆனால் தற்போது சவுதி அரேபியாவில் நிர்மானிக்கப்படவிருக்கும் சுமார் 1,050 மீற்றர் உயரமான இந்த அசர்பைஜான் கட்டிடம் தட்டிச்செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 2,000 ஹெக்டெர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 189 மாடிகளை கொண்ட இக்கட்டித்தை எதிர்வரும் 2022ம் ஆண்டில் கட்டிமுடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment