flashvortex.

Friday, February 3, 2012

அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த இரண்டாவது இருபது-20 போட்டியிலஅவுஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்ததோடு, இம்முறை அவுஸ்திரேலிய மண்ணில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் பங்கேற்றது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் பெய்லி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அவுஸ்திரேலிய அணியில் பிர்ட், கிறிஸ்டியன், பால்க்னர் ஆகியோருக்குப் பதில் ஷான் மார்ஷ், மெக்கே, பின்ச் இடம் பெற்றனர். 

அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்திலேயே சறுக்கியது. பிரவீண் குமார் 'வேகத்தில் வோர்னர்(8) ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5வது பந்தில், டெஸ்ட் தொடர் முழுவதும் சொதப்பிய ஷான் மார்ஷ், ஓட்டம் இன்றி ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் பின்ச் அதிரடி காட்டினார். வினய், பிரவீண் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 36 ஓட்டங்கள் எடுத்த போது, ரன் அவுட்டானார். அடுத்த வந்த பெய்லியும் ரன் அவுட்டானார். 

ரெய்னா பந்தில் ஹசியும், ராகுல் சர்மா பந்தில் வாடேயும் தலா ஒரு சிக்சர் அடிக்க, ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. களத்தடுப்பில் அசத்திய ஜடேஜா, பந்து வீச்சிலும் ஜொலித்தார். இவரது சுழலில் டேவிட் ஹசி(24) சிக்கினார். ராகுல் சர்மா பந்தில் மிட்சல் மார்ஷ் (13) ஆட்டமிழந்தனர்.

வினய் குமார் வீசிய 19வது ஓவரில், வாடே (32) முதலில் ரன் அவுட்டானார். அடுத்த பந்தில் மெக்கே, ஓட்டம் இன்றி ஆட்டமிழந்தார். இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்தியா சார்பில் பிரவீண் குமார், ராகுல் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு காம்பிர், சேவக் இணைந்து உறுதியான துவக்கத்தை கொடுத்தனர். தோகர்டியின் சுழலில் சிக்சர் விளாசிய சேவக் (23) அதிக நேரம் நிலைக்கவில்லை. கோஹ்லி 31 ஓட்டங்களை எடுத்தார்.

பின் கம்பிர், தோனி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கம்பிர், சர்வதேச இருபது-20 அரங்கில், 7வது அரைசதம் அடித்தார். கடைசியில் கம்பிர் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 19.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்களை எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது. கம்பிர் (56), தோனி (21) ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து இருபது-20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. ஆட்டநாயகனாக ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 

No comments:

Post a Comment