flashvortex.

Wednesday, February 29, 2012

ஐ.நா தலையீட்டைக் கோரிய பிரிட்டன் - அச்சத்தில் உறைந்துள்ள சிறீலங்கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வரலாற்றுத் துரோகத்துக்கு பின்னும், சர்வதேச சமூகத்தின் சிறீலங்காவின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன் உச்சக்கட்டமாக, சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டியது அவசியம் என்று பிரித்தானிய அமைச்சர் ஜெரிமி பிறவுண் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விடுத்த அழைப்பு சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய மனிதஉரிமைகளுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண், “பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கத் தவறினால் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும்“ என்று வலியுறுத்தியிருந்தார். 


“சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டும்“ என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். 


பிரித்தானிய பிரதிநிதியின் இந்த அழைப்பு சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவராக ஜெனிவா கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க கடுமையாக எதிர்த்துள்ளார். 


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நாவின் தலையீடோ, மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானமோ கொண்டு வரப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment