flashvortex.

Tuesday, February 28, 2012

சிறீலங்கா மீது மேலும் அதிகரிக்கும் அமெரிக்காவின் அழுத்தம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் (01) ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மரியா ஒற்றேரோவை அனுப்பவுள்ளதாகவும் தெரிய வருகிறது. 

மரியா ஒற்றேரோ அண்மையில் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment