flashvortex.

Saturday, February 25, 2012

கால அவகாசம் கேட்கும் சிறீலங்கா :

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில், சிறீலங்காவுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தினை ஒக்டோபர் மாதம் வரை ஒத்தி வைக்குமாறு சிறீலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகளான பிரித்தானியா, நோர்வே என்பன கூட்டிணைந்து சிறீலங்காவுக்கு எதிரான பிரேரனையை கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.
 
எனவே குறித்த காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் வரையில், தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்ப்படுகின்றது.
 
ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டால் உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment