flashvortex.

Tuesday, February 28, 2012

மெதுவாக நடப்பது மனக்கோளாறின் அறிகுறி – அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

ஒருவர் மெதுவாக நடப்பதை வைத்து அவர் பின்னாளில் மனக்கோளாறு அல்லது பைத்தியம் நோய்க்கு ஆளாவார் என்பதை முன்கூட்டியே கூறமுடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மெதுவாக நடப்பதற்கும் ஆரோக்கியமற்ற நிலைக்கும் தொடர்பு இருப்பதாக முன்னரும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.


2009 ஆம் ஆண்டில் வெளியான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் சஞ்சிகையின்  British Medical Journal, ஆய்வின்படி மெதுவாக நடப்பதற்கும் மாரடைப்புக்கும் இருதய நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேகமாக நடப்பதற்கும் நீண்ட காலம் அவர்கள் வாழ்வதற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பொஸ்டன் மெடிக்கல் சென்டறில் டாக்டர் எரிக்கா காமரகோ நடத்திய ஆய்வின்படி வயோதிபர்கள் உடற்பலவீனத்திற்கும் மனக்கோளாறு ஏற்படுவதற்கும் அதிமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அது எவ்வளவு தூரம் நடுத்தர வயதினரை பாதிக்கும் என்பது நிச்சயமாக தெரியவி;;ல்லை. மூளை மற்றும் நடக்கும் வேகம் முறுக்கு பிடிப்பு ஆகியன குறித்து 62 வயதுக்கு மேற்பட்ட 2410 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 11 வருடங்களுக்கு பின்னர் அவர்களில் 34 பேர் மனக்கோளாறுக்குள்ளாகினர் என்றும் 79 பேர் மாரடைப்புக்கு உள்ளாகினர் என்றும் தெரியவந்ததாக நரம்பு மண்டலத்துறை அக்கடமியின் வருடாந்த கூட்டத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment