flashvortex.

Wednesday, February 29, 2012

இந்தியா, சிறீலங்காவை கைவிடுமா? தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யுமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 
சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்பூரணமாக சிறீலங்காவுக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கம் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
 
தீர்மானம் நிறைவேற்றுவதா அல்லது கைவிடுவதா என்பதனை சம்பந்தப்பட்டத்தரப்பினரே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறீலங்காவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை இந்தியா இன்னும் முடிவு எடுக்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிராலயம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா மாநாட்டில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் மார்ச் 23ம் திகதி எடுக்கப்படவுள்ள நிலையில், அதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தனது நிலைப்பாட்டினை இந்தியா அறிவிக்கும் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசினை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் மஹிந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சீனாவினை பலப்படுத்தி வருவதால் இந்தியா சீற்றம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் இந்தியா தமிழர்களின் நிலை தொடர்பில் அக்கறை கொள்ளாது தனது நாட்டின் பாதுகாப்பிலே அதிக அக்கறை செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் ஆதரவு யாருக்கு என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment