flashvortex.

Monday, February 27, 2012

ஸ்டாலினுக்கு 'கென்டக்கி கர்னல் விருது' _

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் 'கென்டக்கி கர்னல் விருது' வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திமுக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 

"முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய 'கென்டக்கி கர்னல் விருது' வழங்கப்படுகிறது என்று அந்த மாகாண ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார்.
இந்த உயரிய விருது குறித்து தகவல் அளித்து, வாழ்த்துச் செய்தியையும் கென்டக்கி மாகாண ஆளுநரின் செயலாளரும், உலக அமைதிக்கான தூதருமான ஜார்ஜ் ரீப் இமெயில் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தங்களது சுயநலமற்ற சேவைக்காக கென்டக்கி மாகாணத்தின் உயரிய விருது பெற்றமைக்கு வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இவ்விருது பெறும் முதல் தமிழக அரசியல் தலைவரான ஸ்டாலின் இவ்விருதைப் பெற்றதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், அவர் ஒரு தன்னலமற்ற சமுதாய சேவகர், புதிய மாற்றங்களுக்கான சிறந்த சிந்தனையாளர் என அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இவ்விருதானது மக்கள் முன்னேற்றத்திற்கான ஸ்டாலின் அளப்பரிய சேவைகளுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றும் இவ்விருதைப் பெற்றதன் மூலம் இவ்விருதுக்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறி வாழ்த்தியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment