flashvortex.

Monday, February 27, 2012

காதல் என்பது கண்ணில் விழுந்த தூசி..

கண்ணிமைக்கும் பொழுதெல்லாம் கண்ணை உருட்டுகின்ற தூசி.. அது காதல் தூசி. உயிரிலும் மேலாக நினைத்ததாலோ என்னவோ ஒவ்வொரு நொடியும் கண்ணில் விழுந்த தூசிபோல் உருட்டிக்கொண்டு இருக்கின்றதே என்பது காதல் கொண்ட உள்ளங்களில் பெரும்பாலானோரின் தவிப்பு. 
 
   “ காதல் கொண்டு கண்களை இழந்தேன்
      வாழ்வைக் கேட்டு வலிகளைப் புரிந்தேன்
      உன்னையே எண்ணி உறவுகளைத் தொலைத்தேன்
      இன்னுமென்ன வேண்டும் என்னைத் தொலைத்த எனக்கு?”
 
இவ்வாறு மனதில் பல புலம்பல்களைக் கொடுத்துவிட்டு சென்றுவிடும் காதலனையோ காதலியையோ எண்ணி எண்ணி மற்றய காதல் உள்ளம் தவிக்கும். 
 
காதலைப் பொறுத்த வரையில் அது தூசி போலத்தான். தவறிவிடின் கண்ணில் விழுந்த தூசிபோல் காலத்திற்கும் உறுத்திக் கொண்டு இருக்கும். காதலில் தெரிந்து விழுந்தவர்கள் பலர் உள்ளனர்.. தவறி விழுந்தவர்கள் பலர் உள்ளனர் எப்படியாயினும் காதல் தவறும்போது அது ஒரே வலிதான். 
 
இவ்வாறு பல வலிகள் காதல் தவறுவதால் ஏற்பட்டிருக்க இந்தத் தூசி அதிகம் போட்டு உருட்டுவது காதலைச் சொல்லாமல் மறைப்பவர்களைத்தான். காதலைச் சொல்லுவது எப்படி? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் முகம் கழுவுவதற்குச் சென்று குளித்துவிட்டு வருபவர்கள் அதிகம். 
 
பயந்து காதலைச் சொல்லாமல் விடுவதாலோ காதலைச் சொன்ன பின்னர் ஏற்படும் என எதிர்பார்க்கக் கூடியவற்றை எண்ணி ஏங்குவதாலோ எந்தப்பயனும் இல்லை. மாறாக காதலிக்கப்பட்டவர் திருமணமாகிச் சென்றுவிட அந்த வலி எமக்கு கண்ணில் விழுந்த தூசி போல காலத்திற்கும் உருட்டுவது தான் முடிவு. ஆனால் நீங்கள் காதலை உரிய நேரத்தில் சொல்லியிருந்தால் எதாவது ஒரு விருப்பு வெறுப்புக்களின் முடிவை தெரிந்திருக்கலாம் அல்லது காதலரின் சம்மதத்தைக்கூட பெற்றிருக்கலாம். 
 
எனவே காதலை மனம் துணிந்து உரிய வேளையில் தெரிவித்து விடுங்கள். இதனால் உங்கள் காதல் கண்ணில் விழுந்த காதல் தூசி அல்லாமல் மனதில் ஜெயித்த காவியமாகிவிடும்.

No comments:

Post a Comment