flashvortex.

Tuesday, February 28, 2012

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் - அமெரிக்காவினால் இன்று சமர்ப்பிப்பு

ஜெனிவா மனித உரிமை பேரவையில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை அமெரிக்கா இன்று முன் வைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. 
சிறீலங்காவுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரசசார்ப்பற்ற நிறுவனங்கள் ஜெனிவா நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. 
 
இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு,முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர். 

தமக்கு நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள யோசனையை சமர்பிக்க இடமளிக்க வேண்டாம் என சிறீலங்காவின் அமைச்சர்கள் குழு, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையானது உலகில் ஏனைய நாடுகளையும் பாதிக்கும். அவ்வாறு நேர்ந்தால், ஐக்கிய நாடுகள் சபையின் ஆர் 2 எஸ் தலையீடு செய்யும் நடைமுறையை செயற்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த சிறீலங்கா விரோத யோசனையை சமர்பிக்க இடமளித்தால், இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, சீனாவின் பிரிவினைவாத பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட சந்தர்ப்பம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் திவயின தெரிவித்துள்ளது.

சிறீலங்கா மீதான அமெரிக்காவின் தீர்மானம்  மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment