flashvortex.

Wednesday, February 29, 2012

அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஓட்டு : 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்குத் தான், அங்குள்ள இந்தியர்கள் அதிகளவில் ஓட்டளிப்பர் என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில், இந்தாண்டு நவம்பரில், அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் பராக் ஒபாமா வேட்பாளராக நிற்கிறார். எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில், மிட் ரோம்னி, ரோன் பால் மற்றும் ரிக் சான்டோரம் ஆகியோருக்கு இடையில், பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில், பாஸ்டன் நகரில் இயங்கி வரும், ஐ.என்.இ., மீடியா என்ற நிறுவனம், சமீபத்தில் தேசிய அளவில், கடந்த 22 முதல் 26 வரையிலான தேதிகளில், "ஆன்-லைனில்' ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்தக் கருத்துக் கணிப்பில், அமெரிக்கா வாழ் ஆசியர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது தான்.

இந்நிறுவனம், இதுகுறித்து வெளியிட்ட கருத்துக் கணிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாசாசூசெட்ஸ் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னி, தனது போட்டியாளர்களான ரோன் பாலை விட, 24.1 புள்ளிகள் வீதமும், ரிக் சான்டோரமை விட, 33.4 புள்ளிகள் வீதமும், முன்னிலையில் உள்ளார்.அதே நேரம், இன்றே அதிபர் தேர்தல் நடக்குமானால், 80 சதவீத அமெரிக்க இந்தியர்கள், அதிபர் பராக் ஒபாமாவுக்குத் தான் ஓட்டளிப்பர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில், மொத்தத்தில், 80 சதவீதம் பேர் ஒபாமாவிற்கு ஆதரவாகவும், 14.7 சதவீதம் பேர் ரோம்னிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், குடியரசுக் கட்சி வேட்பாளர்களில், ரோம்னிக்கு 51.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment