flashvortex.

Monday, February 27, 2012

ஆப்கான் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஜலலாபாத் விமான நிலையத்தின் வாசலில் கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இதில் குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் வரை காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானநிலையம் பொதுமக்கள் பயணிகள் விமானங்களாலும், சர்வதேச இராணுவ விமானங்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பக்ரம் விமான தளத்தில் அமெரிக்கப் படையினரால் குரான் பிரதிகள் எரிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிய தலிபான்கள் கூறியுள்ளனர்.
இந்த குரான் பிரதிகள் தவறுதலாக எரிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியிருந்தது.
இந்த குரான் எரிப்பை அடுத்த வன்செயல்களில் இதுவரை 30 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வன்செயல்களை நிறுத்துமாறு ஆப்கான் அதிபர் கர்சாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment