flashvortex.

Friday, February 17, 2012

சர்வதேசத்திடம் கால அவகாசம் கேட்கும் இலங்கை

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் இறுதியான, நிலையான அமைதியை எட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மீளிணக்கப்பாட்டை நிறுவுவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 30 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட இலங்கையின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாய்நாடு என உரிமை கோரிப் போராடி தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை படையினரால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டனர்.
குறிப்பாக 2009 ஜனவரி தொடக்கம் மே வரை இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கைப் படையினரால் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆனால் சில மீறல் சம்பவங்களை காரணம் காட்டி இலங்கையானது அனைத்துலக அரங்கலில் ஓரங்கட்டப்படுவதாகவும்;அனைத்துலக அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாங்கள் உப ஆணைக்குழு; அமைச்சரவை ஆணைக்குழுவை அமைத்துள்ளதுடன் தேசிய அளவில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இராணுவத்தினர் தமக்கிடையிலான உள்ளக சாதனை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் மேலும் தேவைப்படுகிறது எனவும் இவ் அதிகாரி சென்னையில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். 

இராணுவத்தின உள்ளக விசாரணைப் பொறிமுறை கடந்த ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்;கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இராணுவத்தினரிடம் கிடைக்கப் பெற்ற பின்னரே இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இவ் இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில்; இதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை மீளக் கட்டியெழுப்புதல் என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அவர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் ஏனைய உலக நாடுகள் சில ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பரிந்துரையொன்றை மேற்கொள்ளவுள்ளதானது நீதிக்குப்புறம்பான செயலாக உள்ளதுடன்;இது நாட்டில் மீளிணக்ப்பாட்டைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இந்த வேளையில்; மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையானது ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்குவதில் எவ்விதத்திலும் உதவ மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கான நாட்கள் நெருங்கி வரும் இந்நிலையில் இலங்கையானது தனக்கு ஆதரவை வழங்குமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துவருகின்றது. இதன் ஒரு கட்டமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலக நாடுகளின் அரசாங்ககங்களைச் சந்தித்து இலங்கைக்கு ஆதவைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதன் அடுத்த கட்டமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் பாகிஸ்தானுக்கான சுறறுப் பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியகையோடு சிங்கப்பூருக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ள நிலையில் ;இலங்கையின் மக்கிய அதிகாரிகள் தொடர்ந்தும் இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment