flashvortex.

Saturday, February 25, 2012

கடன் சுமை கவலையால் மைக்கேல் ஜாக்சன் மரணம் : டாக்டர் கொன்ராட் விளக்கம்

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனை நான் கொல்லவில்லை, அதிக கடன் சுமையால் அவர் போதை மருந்தை உட்கொண்டு இறந்தார் என, அவருடைய டாக்டர் கொன்ராட் முர்ரே தெரிவித்துள்ளார்.


உலக புகழ் பெற்ற அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009ம் ஆண்டு, ஜூன் 25ம் தேதி, அதிக போதை மருந்தை உட்கொண்டதால் இறந்தார்.ஜாக்சனுக்கு அதிக போதை மருந்தை செலுத்தியதால் தான், அவர் இறந்தார் என, டாக்டர் கொன்ராட் முர்ரேவுக்கு, கடந்த ஆண்டு நவம்பரில், நான்கு ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.


இந்த தண்டனையை எதிர்த்து, லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில், நீதிபதியிடம் கொன்ராட் முர்ரே குறிப்பிடுகையில், "ஜாக்சனை நான் கொல்லவில்லை. அவருக்கு, 440 மில்லியன் டாலர் அளவுக்கு கடன் சுமை இருந்தது. கடன் காரணமாக, தன்னுடைய எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் பறிபோவதை பொறுக்க முடியாமல், தானாகவே அவர் அதிக அளவு போதை மருந்து உட்கொண்டு இறந்தார். இதை, கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment