flashvortex.

Monday, February 27, 2012

ஐநாவுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள்

திருகோணமலையில்
ஐநாவுக்கும், ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிராக இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்திருக்கின்றன.
இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையை புலன்விசாரணை நடத்தக் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு பிரேரணையை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொண்டுவருவதற்கான மேற்கு நாடுகளின் திட்டம் குறித்து தாம் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
சில மதகுருமார், முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்பில் அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்அரசாங்கத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்களில் பலர் வந்திருந்தனர். அவர்களுடன் உள்ளூரவர்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். தேசியக் கொடியையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படங்களைக் கொண்ட கார்போர்ட் அட்டைகளையும் அவர்கள் தாங்கிச் சென்றனர்.
இலங்கை மனித உரிமைகளை மீறவில்லை என்று அவர்களது பாதாதைகளில் எழுதப்பட்டிருந்தது.

அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் போடப்பட்டிருந்த பொலிஸாரின் வீதித்தடைகளையும் தாண்டிக்கொண்டு சிலர் சென்றார்கள். ஆனால் மகஜர் ஒன்றை அங்கு கையளிப்பதற்காக 5 பேர் அனுமதிக்கப்பட்டார்கள்.
வடக்கு கிடக்கு மாகாணங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

No comments:

Post a Comment