flashvortex.

Wednesday, February 22, 2012

அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை

  கையடக்கத்தொலைபேசியின் ஊடாக நாம் பயன்படுத்தும் சேவைகளில் முக்கியமானதொன்றே குறுந்தகவல் (SMS- Short Message Service) ஆகும்.

இதற்கான கட்டணம் அழைப்புக்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.

அதுமட்டுமன்றி நினைத்ததனை இலகுவாக தட்டச்சு செய்து உடனே அனுப்பிவிடலாம்.

இத்தகவல் முறையானது குறிப்பாக இளைஞர்களிடையே வெகு பிரபலமாக உள்ளது.


இதனை அறிந்து வைத்துள்ள தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் சலுகை விலையில் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கிவருகின்றன.

இச்சலுகையைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ளத்துடிக்கும் இள வயதினரோ இவற்றினால் எழப்போகும் ஆபத்தினை அறியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குறுந்தகவல்கள் அனுப்புவதிலேயே குறியாய் உள்ளனர்.

அதிகமாகக் குறுந்தகவல்களைத் தட்டச்சு செய்வதனால் நமது கைவிரல்களின் எலும்புகள் பாதிக்கப்படுவதாக முன்னரே ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் அதிகமாகக் குறுந்தகவல்களை அனுப்புவதனால் நமது மூளையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வொன்றில் நிரூபணமாகியுள்ளது.

அதாவது அதிகளவிலான குறுந்தகவல்களால் நமது வாசிப்புத்திறன் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளமுடியாமல் போவதுடன் அவற்றினை ஏற்றுக்கொள்ளமுடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப்பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய திறன்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளில் நிரூபணமாகியுள்ளது.

குறுந்தகவலானது மொழிக் கட்டுப்பாடற்றதாகவும், கொச்சை மொழிப்பிரயோகம் நிறைந்த தகவல் பரிமாற்ற முறையாகக் காணப்படுவதுடன் குறிப்பிட்ட சிலருக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் காணப்படுகின்றது.

மேலும் குறுந்தகவலானது குறிப்பிட்ட அளவு வார்த்தைகளை மட்டுமே கொண்டுள்ளதுடன் அதுவே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதுடன், சில வார்த்தைகள் சுருக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக: BTW- By the way, BRB- Be right back, TTYL- Talk to you later, LOL- Laugh out loud, 2day- Today,

இது மொழித்திறன் மற்றும் மொழியின் பாவனைகளை வெகுவாகக் குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ___

No comments:

Post a Comment