flashvortex.

Monday, February 27, 2012

எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியா, சீனா தான் காரணம்

உலகளவில் எண்ணெய் விலை அதிகரிக்குமானால் அதற்கு, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தேவைதான் முக்கிய காரணமாக இருக்கும் என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:உலகளவில் எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே போவதற்கு குறுகிய கால அடிப்படையில் பார்த்தால், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புரட்சிகள் ஒரு காரணம். அதேபோல், வால்ஸ்ட்ரீட்டில் உள்ள பங்குச் சந்தையின் யூக வாணிபமும் எண்ணெய் விலையை அதிகரிக்கிறது.ஆனால் இதையே நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்தில் எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தேவைதான் முக்கிய காரணமாக இருக்கும்.

சீனாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2010ல் மட்டும் ஒரு கோடி கார்கள் அதிகரித்துள்ளன. அதனால் அங்கு எண்ணெயின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.அமெரிக்கா உலகின் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான எண்ணெயைப் பயன்படுத்துகிறது. அதேநேரம், உலகளவில் மொத்தம் 2 சதவீத எண்ணெய் வளம் மட்டுமே அமெரிக்காவிடம் உள்ளது. அதனால், புதிய எரிசக்தி வளங்களை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

No comments:

Post a Comment