flashvortex.

Wednesday, February 29, 2012

காதலின் உண்மைத் தன்மை என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன?

முதல் காதல் அனுபவம் என்பது நிச்சயமாக வித்தியாசமான அனுபவம் தான். தமது உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து வாலிபத்தின் பருவமாற்றங்களுக்குள் அகப்பட்டு தடுமாறும் ஒரு புதிரான அனுபவம். இதன்போதே அனேகமானவர்கள் தடுமாறுகின்றனர்.

காதலில் விழுந்த இவர்களால் தொடர்ந்து இனிமையான அனுபவங்களை கண்டுகொள்ள முடியாது. ஆரம்பத்தில் காதலின் ஆழம் அறியாது கால்களை வைத்தவர்கள் பின்னர் தான் சற்று ஆழம் அறியவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த நிலமையில் அவர்களுடைய மனங்களில் ஏன் இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்ற எண்ணங்கள் எழுகின்றன.
காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான். ‘எனக்கு எப்படியும் யாராவது ஒருவன் கணவனாக வரப் போகிறான். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற, எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, அந்த ஒருவனாக இருந்தால் நல்லதுதானே’ என்று மனம் போடும் கணக்கு, காதலின் முக்கியக் கூறு!.
 
இது ஆண்களுக்கும் பொருந்தும்.  கல்லூரிப் பருவம் என்றதுமே கூடவே வந்து விடுகிறது, காதல்! இனக்கவர்ச்சி ஆபத்தில் சிக்கி பலரும் திசைமாறிப் போய்விட, காதலை ஆக்கப்பூர்வமான ஒரு சக்தியாக பயன்படுத்தி வாழ்க்கையில் ஜெயித்த காதலர்களும் இருக்கின்றார்கள்.
 
காதலில் வெற்றி கொண்டவர்களுக்கு காதல் என்பது உண்மையான அன்பாகதான் தெரியும். அதேநேரம் தோல்வி அடைந்தவர்களுக்கு  அது துயரத் தூண்டில்தான். மனித கொல்லியாக கட்டவிழ்த்து விடப்பட்ட அசை யாருக்குத்தான் இருக்காது??. அந்த ஒரு வகை ஆசையில் காதலிக்கத் தொடங்கி அதுவே ஆபத்தாக தெரியும் போது என்ன தான் செய்ய முடியும்.?........ உண்மை என்றாலே பொய்தானா?? இந்த வாழ்க்கை தேவைதானா??. காதல் என்பது வேதனையானதா??  என்று பல கேள்விகள் மட்டும் மனதில் எழுவதை அவதானிக்கலாம். 
     
காதலிக்கிறவர்களில் அனேகமானவர்களுக்கு காதலித்து சில காலத்தின் பின் இது உண்மையான அன்பு தானா?.. அல்லது தூண்டில் போன்ற வேதனையா? என்ற சந்தேகமும் ஏக்கமும் உருவாகிறது. இதனுடைய உண்மைத்தன்மை என்பது காணமுடியாத ஒன்றாக காணப்படுகிறது. அந்தவகையில் பார்க்கின்றபோது நிச்சயமாக உண்மைக்காதலாக இருந்து அதில் வெற்றிபெற்றவர்களையும் ஒரு கணம் பார்க்க வேண்டும். உண்மைக்காதலாக இருந்து தோல்வியை அடைந்தவர்களுடைய நிலையை உணர்த்துவதற்கு வார்த்தைகள் கூட வேதனை தாங்காது எனலாம்.
   
இத்தனையும் தாண்டி நாம் இனங்காண வேண்டியவர்கள் போலியாக நடிப்பவர்களைத்தான். மனித உணர்வுகளை மதிக்கத்தெரியாத ஒருவன் தான் நிச்சயமாக காதலை அலட்சியம் செய்வான். அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் காதலுக்கான நம்பிக்கைத்தன்மை குறைவடைந்து செல்கிறது.
 
உண்மையான எண்ணங்களை சுமக்கும் இதயங்களுக்கு ஒரு ஏக்கத்தை கொடுக்கிறது.  எவளவு தான் நாம் எடுத்து சொன்னாலும் இதற்கான ஒரே வழி காதலை விளையாட்டாக எண்ணுபவர்கள் அதனை புரிந்துகொண்டு அதனை மதித்து செயற்படுவதுதான்.
     
இத்தகைய சூழலில் வாழ்கின்ற காரணத்தால் உண்மை பொய்களை அறிந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. “ முயல் பிடிக்கிற நாயை மூஞ்சயில தெரியும்” என்பார்கள் தானே.. என்றுகொண்டு நீங்கள் முகத்தை வைத்து உண்மையை அறிந்துவிட முடியாது.. நான் சொல்லவருவது என்னவென்றால் பார்த்தவுடன் காதல் என்பது மேற்கூறிய சந்தர்ப்பங்களை உருவாக்கிவிடும். கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது காதலுக்கும் சேர்த்துத்தான் சொன்னார்கள்.
 
எனவே இயன்ற அளவு நீங்கள் முன்னர் அறிந்த ஒருவரை காதலிக்க முயற்சி செய்யுங்கள்.. அங்கு உங்கள் நம்பிக்கைத்தன்மை உயர்வாக காணப்படும். அடுத்ததாக நீங்கள் தெரிவுசெய்தவருட்ன் வெளிப்படையாக பழகுங்கள் அது இருவருக்கும் இடையில் நிச்சயமாக ஒரு உயர்ந்த புரிந்துணர்வை தரும். அவ்வாறு பயணம் செய்யும் போது அது வெற்றியான பயணமாகவே அமையும்.
     
தெரிந்த ஒருவரை தெரிவு செய்யுங்கள் என்றதற்காக சிலர் நினைக்கலாம் காதல் இவர் இவர் மேல்தான் ஏற்படவேண்டும் என எண்ணி வருவதில்லையே என்று உண்மைதான். ஆனால் உணர்வு இறந்த நெஞ்சங்கள் மத்தியில் வாழும் நாம் எமது துடிப்பான எதிர்காலத்தை துடுப்பற்ற படகைப்போல் மாற்றாது வாழ இது கொஞசம் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் ஓரளவுக்கு நாம் காதலில் வெற்றி கொள்ளலாம்.
         
இங்கே காதலர்களுக்கு இடையில் ஏற்படும் குழப்பங்கள் துன்பங்கள் என்பவற்றிற்காக எதனை எடுத்து சொன்னாலும்.. ஒரு தலையாய் காதல் செய்பவர்களுடைய அனுபவம் ஏக்கம் எல்லாம் வித்தியாசமானது. அது தனது காதல் வெற்றியையே குறிக்கோளாககொண்டது. இங்கும் கூட ஒரு சிறந்த காதலுக்கான அடித்தளம் உண்டு என்பதை காதலிக்கப் படுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஒருதலைக்காதல் வெற்றி அடைகின்ற போது அங்கு சுகமான நினைவுகள் நிலையான சுகமாக தெரியும். தோல்விகள் தான் வாழ்வின் வெற்றிப்படி என்பார்கள். ஆனால் உண்மைக் காதலை பொறுத்த வரையில் தோல்வி என்பது  காதல் காவியம் தான்.

No comments:

Post a Comment