
ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முத்தையா முரளிதரன் 1.17 கோடி ரூபாய்க்கு மஹெல ஜயவர்தன 6.80 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கலமை கொல்கத்தா அணி 4 .4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
5வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 144 வீரர்கள் இன்று ஏலம் விடப்பட்டார்கள். ஏலப் பட்டியலில் 8 இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்திய வீரர் பார்தீவ் பட்டீலை ரூ.3.12 கோடிக்கு ஹைதராபாத் டெக்கான் சார்ஜஸ் அணி விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இலங்கை வீரர் முத்தையா முரளிதரனை 1.17 ரூபாய்க்கு பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியுள்ளது.
இதேபோல மற்றொரு இலங்கை வீரரும் தற்போது அணித் தலைவருவமான மகிலே ஜெயவர்த்தனேவை ரூ.6.8 கோடிக்கு டெல்லி டேர் டெலில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா அணி வீரர் கிப்ஸை ரூ.24 இலட்சத்துக்கு மும்பை இந்தியன் அணி ஏலம் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜை ரூ.2.3 கோடிக்கு ராஜஸ்தான் ரோராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
No comments:
Post a Comment