flashvortex.

Saturday, February 25, 2012

எங்களைக் காப்பாற்றுங்கள்!காயமடைந்த ஊடகவியலாளர்கள்!!! (வீடியோ)

 புதன்கிழமை HOMS ல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலில் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களோடு மேலும் பலர் காயமடைந்தனர். FIGAROபத்திரிகையின் பெண் ஊடகவியலாளர் Edith Bouvier ம் இதில் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இவர் தனது நிலையைக் காணொளியாக YOUTUBEல் வெளியிட்டுள்ளார்.

இவர் அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.கட்டிலில் படுத்துள்ளார். இவருக்கு காலில் பலத்த பல முறிவுகள் உள்ளன. சில வைத்தியர்கள் வந்து செல்கின்றார்கள். இவரோடு FIGARO MAGAZINE மற்றும் TIME MAGAZINE ற்கான ஊடகப்படப்பிடிப்பாளர் WILLIAM DANIELS ம் உள்ளார். வெளியில் பலத்த குண்டு வீச்சுச் சத்தங்கள் கேட்கின்றன.



 Edith Bouvier தனது வேண்டுகோளில் 'இங்கு உள்ள வைத்தியர்கள் தம்மால் இயன்றதைச் செய்துள்ளனர். இங்கு சத்திர சிகிச்சைக்கான வசதிகள் எதுவும் இல்லை. எவ்வளவு விரைவாக எமக்குச் சிகிச்சை அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் சிகிச்சை அளிப்பது நல்லது. அனால் அதற்கு வெளியில் ஒரு யுத்த நிறுத்தம் கொண்ட வரப்பட வேண்டும். தொடர்சியான குண்டு வீச்சு நடக்கின்றது. இது நின்றால் மட்டுமே நாம் 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள லெபனான் நாட்டிற்குள் நுழைய முடியும். அங்கு எமக்கான முழுமையான சிகிச்சைகள் கிடைக்கும்.எனத் தெரிவித்துள்ளார். 


 பிரான்சும் பிரித்தானியாவும் காயடமைந்த ஊடகவியலாளர்களையும் இறந்த ஊடகவியலாளர்களின் உடலங்களையும் பிரான்சிற்கு அனுப்பி வைக்குமாறு இராஜரீக ரீதியில் கேட்டுள்ளனர் ஆனால் இதற்குச் சிரிய அரசு எந்த விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை. இது பிரான்ஸ் பிரித்தானிய அரசுகளுக்குப் பெரும் இராஜதந்திர சவாலாகவே இருக்கின்றது. பிரன்சின் ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான நிக்கேலா சார்க்கோசி சிரிய அரசை வன்மையாகக் கண்டித்ததோடு இந்த அரசு உடனடியாகப் பதவி விலகவேண்டம் என்றும் தண்ணடிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு சிரிய இராணுவ அதிகாரி ஒருவர் தனது படையினருக்கு 'சிரிய மண்ணில் கால் வைக்கும் எந்த வெளிநாட்டு ஊடகவியலாளரையும் கொல்லுங்கள்என்று ஆணையிட்டதை லெபனானின் உளவுத்துறையினர் பதிவு செய்துள்ளனர். இதானால் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் வேண்டுமென்றே நடாத்தப்பட்டதாகவே கருதப்படுகின்றது. வெகு விரைவில் ஐரோப்பிய யுத்த மேகங்கள் சிரியாவை மூடப்போவது உறுதியாகின்றது.

No comments:

Post a Comment