flashvortex.

Thursday, February 2, 2012

சங்கிலிய மன்னனின் போர்வாள்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி மன்னன் சங்கிலியனின் போர்வாள் யாழ்ப்பாணத்தில் உள்ள வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் உள்ளது.

சங்கிலிய மன்னன் போருக்கு செல்லும் போது இவ் ஆலயத்தில் தான் போர்வாளை வைத்து அம்மனின் ஆசி பெற்று போருக்கு சென்று வெற்றி பெற்று வருவதாக வரலாற்று கதைகள் கூறுகின்றன.



கோயிலுக்கு சென்று வாளை வைத்து வணங்கிய பின் தனது 2  வாளை கோவிலிலே வைத்து சென்று விட்டதாகவும் அதில் 1 வாளே தற்போது வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் உள்ளது என்று வீரமாகாளி அம்மன் குருக்கள்  கூறினார்.

மற்றைய வாளை விடுதலைப்புலிகள் தமது அருங்காட்சியகத்தில் வைக்க எடுத்து சென்று விட்டார்களாம்...ஆனால் அந்த வாளே மிகவும் பழமையான வாள் என்று தெரிவித்தார்.

முதலில் நாம் இந்த வாளையேஎடுத்து செல்லுமாறு கூறினோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு பழமையான வாளே வேண்டும் என்று கூறி எடுத்து சென்றுவிட்டனர். இப்போது அந்த வாள் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்று மேலும் கூறினார்.

No comments:

Post a Comment