சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தம் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொடுக்காது. பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி நாட்டிற்கு பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுக்கும் வெளிநாடுகள் உள்நோக்கத்துடனேயே செயற்படுகின்றனவே தவிர இலங்கை மீது பற்று எதுவும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டிவிட்டு புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனால் தான் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு முயற்சிக்கையில் வன்னி தமிழர்கள் அரசை பாதுகாக்க வீதியில் இறங்கி போராடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Wednesday, February 29, 2012
ஒபாமாவைக் கொல்லப் போவதாக பேஸ்புக்கில் மிரட்டிய நபர் _
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய போவதாக பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்திருந்த 20 வயது இளைஞர் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோகுயின் அமோதர் செராபியோ என்ற அந் நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜோகுயின் அமோதர் செராபியோ என்ற அந் நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
படையினர் எந்த தப்பும் செய்யவில்லை - எல்லாம் சர்வதேசத்தின் சூழ்ச்சியே : மஹிந்த ராஜபக்ஷ
எமது அரசாங்கம் ஒருபோதும் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான படுகொலைகள், சட்டவிரோத கைதுகள் எதனையும் படையினர் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவிலான படுகொலைகள், சட்டவிரோத கைதுகள் எதனையும் படையினர் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதலின் உண்மைத் தன்மை என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன?
முதல் காதல் அனுபவம் என்பது நிச்சயமாக வித்தியாசமான அனுபவம் தான். தமது உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து வாலிபத்தின் பருவமாற்றங்களுக்குள் அகப்பட்டு தடுமாறும் ஒரு புதிரான அனுபவம். இதன்போதே அனேகமானவர்கள் தடுமாறுகின்றனர்.
காதலில் விழுந்த இவர்களால் தொடர்ந்து இனிமையான அனுபவங்களை கண்டுகொள்ள முடியாது. ஆரம்பத்தில் காதலின் ஆழம் அறியாது கால்களை வைத்தவர்கள் பின்னர் தான் சற்று ஆழம் அறியவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலமையில் அவர்களுடைய மனங்களில் ஏன் இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்ற எண்ணங்கள் எழுகின்றன.
அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஓட்டு : 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு
|
பின்லேடனின் மறைந்திருந்ததை முன்னரே அறிந்திருந்த பாகிஸ்தான் - விக்கிலீக்ஸ்
பாகிஸ்தானிய இராணுவத்தினரின் உளவுப் பிரிவிலிருந்த முக்கிய அதிகாரிகளுக்கு
பின்லேடன் அங்கு மறைந்திருந்தமை பற்றி முன்னரே அறிந்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு அரச ஊழியர் போராட்டம்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஐ.நா வின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிரப்பு தெரிவித்தும் அரசாங்க அதிகாரிகளும் ஊழியர்களும் நடத்திய போராட்டங்கள் புதனன்று மாலை நடைபெற்றுள்ளன.
பொது நிர்வாக அமைச்சினால் திடீரென பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இது தொடர்பான பணிப்புரைகள் அரசாங்க அதிபர்களினால் பிரதேச செயலாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இந்தியா, சிறீலங்காவை கைவிடுமா? தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யுமா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்பூரணமாக சிறீலங்காவுக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்பூரணமாக சிறீலங்காவுக்கு ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா தலையீட்டைக் கோரிய பிரிட்டன் - அச்சத்தில் உறைந்துள்ள சிறீலங்கா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வரலாற்றுத் துரோகத்துக்கு பின்னும், சர்வதேச சமூகத்தின் சிறீலங்காவின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் உச்சக்கட்டமாக, சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டியது அவசியம் என்று பிரித்தானிய அமைச்சர் ஜெரிமி பிறவுண் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விடுத்த அழைப்பு சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று: ஜெயவர்த்தனா
இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தது ஜீரணிக்க முடியாத ஒன்று என இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தனா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 320 ஓட்டங்கள் எடுத்த பின்பும் தோல்வி என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். விராத் கோஹ்லி மிக அற்புதமாக விளையாடினார்.
Tuesday, February 28, 2012
மெதுவாக நடப்பது மனக்கோளாறின் அறிகுறி – அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் - அமெரிக்காவினால் இன்று சமர்ப்பிப்பு
ஜெனிவா மனித உரிமை பேரவையில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை அமெரிக்கா இன்று முன் வைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
சிறீலங்கா மீது மேலும் அதிகரிக்கும் அமெரிக்காவின் அழுத்தம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் (01) ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் சோனியா காந்தி
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளிநாடு ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை முடிந்து அவர் ஐந்து நாட்களில் டில்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி

போட்டியில் 321 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் மிக அபாரமாக ஆடிய விராத் கோலி 86 பந்துகளை மாத்திரம் சந்தித்து 133 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்தியாவில் வேலைநிறுத்தம்
இந்தியாவில் உயர் பணவீக்கத்துக்கு எதிராகவும், அரச தொழில் நிறுவனங்களை அரசாங்கம் விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடாளாவிய ரீதியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய 11 தொழிற்சங்கங்களால் இந்த வேலை நிறுத்தத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், தபால் நிலையங்கள், போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
Monday, February 27, 2012
பேசாப் படத்திற்கு ஆஸ்கார் விருது
இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட பேசாப்படமான- தி ஆர்ட்டிஸ்ட் படத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளும் இந்தப் படத்தில் நடித்த ழான் டுழார்டைன் மற்றும் மிஷேல் ஹஸானவிஷியஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
1920 ஆம் ஆண்டு காலகட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தி ஆர்ட்டிஸ்ட்.
நிலம் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.
'இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை' - மஹிந்த சமரசிங்க
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே உள்ளூர் வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் படிபினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று மாறு கோரும் பிரேரணைகள் எதுவும் ஐநா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஸ்டாலினுக்கு 'கென்டக்கி கர்னல் விருது' _

இது தொடர்பாக திமுக தலைமையகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
"முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய 'கென்டக்கி கர்னல் விருது' வழங்கப்படுகிறது என்று அந்த மாகாண ஆளுநர் ஸ்டீவன் எல். பெஷேர் அறிவித்துள்ளார்.
தனது உரையில் சிறீலங்கா பற்றி பேசாத நவநீதம்பிள்ளை
|
காதல் என்பது கண்ணில் விழுந்த தூசி..
கண்ணிமைக்கும் பொழுதெல்லாம் கண்ணை உருட்டுகின்ற தூசி.. அது காதல் தூசி. உயிரிலும் மேலாக நினைத்ததாலோ என்னவோ ஒவ்வொரு நொடியும் கண்ணில் விழுந்த தூசிபோல் உருட்டிக்கொண்டு இருக்கின்றதே என்பது காதல் கொண்ட உள்ளங்களில் பெரும்பாலானோரின் தவிப்பு.
“ காதல் கொண்டு கண்களை இழந்தேன்
வாழ்வைக் கேட்டு வலிகளைப் புரிந்தேன்
உன்னையே எண்ணி உறவுகளைத் தொலைத்தேன்
இன்னுமென்ன வேண்டும் என்னைத் தொலைத்த எனக்கு?”
சர்ச்சையை ஏற்படுத்திய சச்சினின் ஆட்டமிழப்பு

மறுமுனையில் இருந்து சச்சின் ஓடி வரும் போது இடையில் புகுந்த பிரட் லீ தேவையில்லாமல் இடையூறு செய்தார். அதற்குள் வார்னர் பந்தை நேரடியாக த்ரோ செய்ய சச்சின் ஆட்டமிழந்தார். இதற்கு சச்சின் அதிருப்தி தெரிவித்தார். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் ஆட்டமிழந்தார் என அறிவித்தனர்.
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் களச் சமர் - வெல்லப் போவது யார்?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் பெரும் பரபரப்புடன் ஆரம்பமாகவுள்ளது.
இதன் போது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ளது.
இன்றுகாலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பிளெனரி கூட்ட அறையில் ஆரம்பநிகழ்வு இடம்பெறும்.
இதன் போது சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ளது.
இன்றுகாலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பிளெனரி கூட்ட அறையில் ஆரம்பநிகழ்வு இடம்பெறும்.
ஒசாமா பின்லாடன் பதுங்கிய வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது
பாகிஸ்தான் அபோதாபாத்தில், அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த வீட்டை, அதிகாரிகள் நேற்று இடித்துத் தரைமட்டமாக்கினர். பாக்., அபோதாபாத்தில், ராணுவ அகாடமி அருகில், அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தார். மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டைச் சுற்றி அதிகமான உயரத்தில், சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.மொத்தம் 38 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த வளாகத்தின் மத்தியில் வீடு கட்டப்பட்டிருந்தது. எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வீட்டில், பின்லாடன் பதுங்கியிருந்தபோது, கடந்த ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். பின்லாடன் தாக்குதல் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, இந்த வீட்டை நேரில் பார்வையிட்டது. இதில் உள்ள பொருட்கள் பத்திரமான இடங்களுக்கு அகற்றப்பட்டன. தொடர்ந்து, வீட்டை இடித்துத் தள்ளும்படி விசாரணைக் குழு உத்தரவிட்டது.
எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியா, சீனா தான் காரணம்
உலகளவில் எண்ணெய் விலை அதிகரிக்குமானால் அதற்கு, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தேவைதான் முக்கிய காரணமாக இருக்கும் என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆப்கான் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஜலலாபாத் விமான நிலையத்தின் வாசலில் கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இதில் குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் வரை காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானநிலையம் பொதுமக்கள் பயணிகள் விமானங்களாலும், சர்வதேச இராணுவ விமானங்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஐநாவுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள்
ஐநாவுக்கும், ஏனைய மேற்கத்தைய நாடுகளுக்கும் எதிராக இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்திருக்கின்றன.இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையை புலன்விசாரணை நடத்தக் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு பிரேரணையை ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொண்டுவருவதற்கான மேற்கு நாடுகளின் திட்டம் குறித்து தாம் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
Saturday, February 25, 2012
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில் _

சச்சின் ஓய்வு பெறுவது எப்போது?
|
ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கடன் சுமை கவலையால் மைக்கேல் ஜாக்சன் மரணம் : டாக்டர் கொன்ராட் விளக்கம்
பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனை நான் கொல்லவில்லை, அதிக கடன் சுமையால் அவர் போதை மருந்தை உட்கொண்டு இறந்தார் என, அவருடைய டாக்டர் கொன்ராட் முர்ரே தெரிவித்துள்ளார்.
எங்களைக் காப்பாற்றுங்கள்!காயமடைந்த ஊடகவியலாளர்கள்!!! (வீடியோ)
புதன்கிழமை HOMS ல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலில் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களோடு மேலும் பலர் காயமடைந்தனர். FIGAROபத்திரிகையின் பெண் ஊடகவியலாளர் Edith Bouvier ம் இதில் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இவர் தனது நிலையைக் காணொளியாக YOUTUBEல் வெளியிட்டுள்ளார்.
இவர் அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.கட்டிலில் படுத்துள்ளார். இவருக்கு காலில் பலத்த பல முறிவுகள் உள்ளன. சில வைத்தியர்கள் வந்து செல்கின்றார்கள். இவரோடு FIGARO MAGAZINE மற்றும் TIME MAGAZINE ற்கான ஊடகப்படப்பிடிப்பாளர் WILLIAM DANIELS ம் உள்ளார். வெளியில் பலத்த குண்டு வீச்சுச் சத்தங்கள் கேட்கின்றன.
முல்லைப்பெரியாறு: ஆனந்த் குழுக் கூட்டம் திடீர் ரத்து
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழுவின் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) கூடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
அணைப் பகுதியில் துளையிட்டு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
அணைப் பகுதியில் துளையிட்டு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன் ஆனந்த் குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
கால அவகாசம் கேட்கும் சிறீலங்கா :

அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகளான பிரித்தானியா, நோர்வே என்பன கூட்டிணைந்து சிறீலங்காவுக்கு எதிரான பிரேரனையை கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.
Friday, February 24, 2012
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு
இலங்கையில் மக்களின் அன்றாட முக்கிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Wednesday, February 22, 2012
இலங்கைப் போரில் கண்ணையிழந்த பிரபல அமெரிக்க பெண் பத்திரிகையாளர் சிரியப் போரில் பலி! _
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அது தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதில் கள முனை அனுபவத்தைக் கொண்டிருந்தவரும் உலகப் புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரும் புகைப்படப் பிடிப்பாளருமான மேரி கொல்வின் (Marie Colvin) சிரியாவில் இடம்பெறும் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்த வேளை எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.
2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.
அதிகளவில் குறுந்தகவல் அனுப்புபவரா நீங்கள்?: உங்களுக்கான எச்சரிக்கை
கையடக்கத்தொலைபேசியின் ஊடாக நாம் பயன்படுத்தும் சேவைகளில் முக்கியமானதொன்றே குறுந்தகவல் (SMS- Short Message Service) ஆகும்.
இதற்கான கட்டணம் அழைப்புக்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.
அதுமட்டுமன்றி நினைத்ததனை இலகுவாக தட்டச்சு செய்து உடனே அனுப்பிவிடலாம்.
இத்தகவல் முறையானது குறிப்பாக இளைஞர்களிடையே வெகு பிரபலமாக உள்ளது.
இதற்கான கட்டணம் அழைப்புக்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.
அதுமட்டுமன்றி நினைத்ததனை இலகுவாக தட்டச்சு செய்து உடனே அனுப்பிவிடலாம்.
இத்தகவல் முறையானது குறிப்பாக இளைஞர்களிடையே வெகு பிரபலமாக உள்ளது.
Sunday, February 19, 2012
மன்னார் இராணுவ முகாமுக்கு பெண் அமைப்புக்கள் எதிர்ப்பு
மன்னார் புறநகர்ப்புறத்தில் எழுத்தூர் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
இங்குள்ள பல மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கையெழுத்திட்டு எழுத்து மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.
`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?' என்று கேட்கும் பெண்களுக்கான ஆலோசனை:
கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை.
Friday, February 17, 2012
காதலின் இலக்கு எது? காதலின் இலக்கு எது?
ஒருவர், தனக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் இலக்காக இருக்கிறது. சிலரைத் தவிர, வாழ்க்கையில் காதலிக்காமல் யாருமே இருந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும்.
காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!.....
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள். காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!
பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை
ஆண்கள் சில விஷயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகத்தைச் சுளிப்பார்கள். மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை தங்கள் துணைவர் காதில் போடமல் இருப்பது நல்லது…
சீனாவில் கப்பல்கள் மோதல் 19 பேர் மீட்பு: 3 பேர் கதி என்ன?
சீனாவில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது, மற்றொரு சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.
சர்வதேசத்திடம் கால அவகாசம் கேட்கும் இலங்கை
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் இறுதியான, நிலையான அமைதியை எட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மீளிணக்கப்பாட்டை நிறுவுவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 30 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட இலங்கையின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் தாய்நாடு என உரிமை கோரிப் போராடி தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை படையினரால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டனர்.
Wednesday, February 15, 2012
My first day at school
I was five years old. My father and mother told me one day. That I was a big girl and it was high time that I want to school. I was very sad. Because I was very happy with my friends in the pre- school.. but my parents said that my pre-school period was over and I had to go to school. Within one week my mother sewed a new uniform for me and she bought me a pair of white shoes and a new school bag.
On this first day I was adamant to get ready to school. I cride aloud. But my mother coaxed me and dressed me, combed my hair and clipped on a bow on my hair. My father came with his camera and took a photograph for me. He took me to my new school. He walked with me holding my hand to wards the grade one classroom. Because in the pre-school we did not have classrooms as such. My father spoke to my class teacher and went off.
Friday, February 10, 2012
வயது சர்ச்சை: இராணுவத் தளபதியின் கோரிக்கை நிராகரிப்பு
சாதனை படைக்கவுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம்
உருண்டு ஓடும் உலகில் சாதனைக்கு அளவே இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு சாதனை உலகின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
அதேபோல் இப்பொழுது உலகின் மிகவும் உயரமான கட்டிடம் என்ற சாதனையை அசர்பைஜான் கோபுரம் சொந்தமாக்கவுள்ளது.
அதேபோல் இப்பொழுது உலகின் மிகவும் உயரமான கட்டிடம் என்ற சாதனையை அசர்பைஜான் கோபுரம் சொந்தமாக்கவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்கள் ஏன் ஆதரித்தனர்?
விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக அவர்கள் தமது பகுதியில் நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே புலிகள் அமைப்பு மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று.
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்கள் ஏன் ஆதரித்தனர்?
விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக அவர்கள் தமது பகுதியில் நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே புலிகள் அமைப்பு மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று.
மஹிந்த ராஐபக்ஷ நிர்வாக ரகசியங்களை வெளியிட்ட இராணுவ பேச்சாளர்
மஹிந்த ராஐபக்சவின் நிர்வாக ரகசிங்களை சிரேஸ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் அமெரிக்காவிற்கு வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் இராணுவப் பேச்சாளரும், இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, சில முக்கியமான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னாள் இராணுவப் பேச்சாளரும், இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, சில முக்கியமான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)