flashvortex.

Sunday, April 22, 2012

காதலின் காயம் ஆறவில்லையென்றால் கொஞ்ச நாள் காலத்தின் கையில் உங்களை விட்டு விடுங்கள்



நாம் எத்தனையோ பெண்களை பார்க்கிறோம் பழகுகிறோம் ஆனாலும் நாம் பார்க்கும், பழகும் எல்லா பெண்களையும் நமக்கு பிடித்து விடுவதில்லை நமக்கு பிடித்தஒரு பெண்ணைதான் நாம் விரும்பி காதலியாக்கிக் கொள்வோம் அப்படிப்பட்ட அழகான ஒரு காதல் மலர்ந்து வருவது நமக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் அந்த வேளைகளில் இனி அவளுடனேயே ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட வேண்டும், அவளையேநம் வாழ்க்கையின் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று நமது விருப்பங்கள் நம்மிடம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும்

நமது மனதில் ஊடுருவி விட்ட அவளின் ஒவ்வொரு செயலும் நமக்கு பிடித்துவிடும்அவள் எதை செய்தாலும் அவளை குற்றம் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவிற்கு அவள் சொல்லும் சின்ன சின்ன பொய்களையும் தவறுகளையும் ரசித்து ரசித்து பழகிவிடுவோம் அப்படிப்பட்ட நாம் ஒரு நாள் அவளையே பிரிந்து விடுகிற கட்டாயம் ஏற்படும் போது அதனுடைய ஆழமான வலிகள் நம்மை எங்கேயோ தூரத்தில் கொண்டு சென்று விட்டு விடுகின்றது அங்கே எதுவும் நம்மை ஆறுதல்படுத்த முடிவதில்லை

பிரகாசமாக இருந்த நம் வாழ்க்கை இருண்டுபோய் கிட்டத்தட்ட ஒருபைத்தியக்காரனைப் போல இருப்பதைதான் அப்போது நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும் இப்படிப்பட்ட சூழலில்தான் சிலர் மதுவின் துணையை நாடிசெல்கின்றனர் அதிலும் ஆறுதல் கிடைக்காமல் போனால் இறுதி ஆறுதலுக்காக மரணத்தையே தேடிப்போனவர்களும் பலர் உண்டு இன்னும் சிலர் அவளை பிரிந்தாலும் தன் இதயத்திலிருக்கும் அவளின் நினைவுகளோடு வாழதுவங்கி விடுவார்கள் இதனால்தான் பலர் தாடியுடன் சோகமாக அலைகிறார்கள்
இப்படிப்பட்ட காதலின் தோல்வி என்பதுதான் என்ன! இது எந்த அளவிற்கு நம்மைபாதிக்கும, மதுதான் மரணம்தான் இதற்கான தீர்வா! இதைப்பற்றிய நல்ல ஞானமுள்ள தெளிவுகள் நமக்கு தேவை, காதலினுடைய தோல்வி நம்மை எதுவும் செய்து விடமுடியாது என்பதை சில உண்மைகளின் நாம் மூலமாக தெரிந்து கொள்வோம்.
காதல் வயப்படும் போது தன்னுடைய சினேகிதியை தன்னுடையவளாக, தனக்கு சொந்தமானவளாக எவளவு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமோ அதன் இறுதி அளவு வரையிலும் அவளை தனக்கு உரிமையாக்கி தன் உரிமையானவள் என்ற ஒரு பதிவை மனதில் பதித்து வைக்கிறார்கள் அவள் கைவிட்டு செல்லும் போது மனதின் பதிவுகளும் வெளியே இழுக்கப்படும் அதை வெளியேவிடவும் முடியாமல், தக்கவைத்துக் கொள்ளவும் முடியாமல் துடிக்கும் போது அதை தோல்வியின் வலியாக உணருகிறோம்.
ஒரு பெண்ணின் உதவியினோதான் உருவாக்கிய மனப்பதிவுகளை இன்னொரு பெண்ணின்  உதவியினோடு அதே போன்ற இன்னொரு பதிவினையும் உருவாக்கவும் முடியும் ஏனென்றால் எத்தனைப் பெண்களிடம் உணர்வுப் பூர்வமாக பழகினாலும் அந்தஉணர்வுகள் உங்களின் இயல்பின்படியே, மன விருப்பின் படியே உங்கள் மனதில்படிகின்றது .ஒரு சிறிதான தூண்டுதல் மட்டுமே பெண்களால் வருகிறது அதை பிரமாண்டப்படுத்தி உங்களில் காதல்சுவையை தருவது உங்கள் மனதிலுள்ளவிருப்ப  உணர்வே எனவே காதலில் நீங்கள் எதையும் இழந்துவிட முடியாது நீங்கள் இதுவரையிலும் பெற்றுக்கொண்ட இன்பங்கள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம் அதன் இன்ப உணர்வுகள் அனைத்தும் இன்னும் உங்களிடம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது எனவே இன்னும் கடந்தகால சினேகிதியின் நினைவில் வாழ வேண்டாம். இவை அனைத்தையும் எதிர்கால சினேகிதியால் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களுடையவள், உங்களுக்கானவள் என்ற உரிமையை வாங்கிக் கொண்டு யாரும் இந்த பூமியில் பிறப்பதில்லை அவளை உங்களில் பொருத்தினால்தான் உங்கள் உயிர் இயங்குமென்று உங்களுக்காக எந்த பெண்ணையும் உருவாக்கப்படவில்லை எந்த பெண் உங்கள் வாழ்வில் வந்தாலும் உங்கள் இன்பவாழ்வை மலரச்செய்ய முடியும்நீங்கள் யாரை நேசிக்கும் போதும் அந்த நேசம் எங்கிருந்து ஏற்படுகிறது,
அதற்கு எதாவது குறிக்கோள் இருக்கிறதா, அது மனதில் எப்படிப்பட்ட உணர்வுகளை தோற்றுவிக்கிறது என்பதை பற்றி முன்கூட்டியே அனுமானிக்கும் உணர்வோடுயாரிடமும் பழக வேண்டும் அப்படி பழகினால் உங்கள் வாழ்வினில் ஏற்படும்எதிர்பாராத திருப்பங்கள் உங்களுக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காது
.
 நாமெல்லோருக்கும் இயற்கையிலேயே சில மன உணர்வுகள் உள்ளன சில வெற்றிகளின் போதும், பெருமைகளின் போதும் அந்த உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடியும்அந்தவகைப் பட்ட பல உணர்வுகள் நம்முள்ளே தேங்கி கிடக்கின்றன. அவைகளின்கூட்டு முயற்சிதான் காதலியை வானம் அளவிற்கு உயர்ந்தவளான ஒரு பிரம்மையைதோற்றுவிக்கின்றது.
நமக்கு சொந்தமான நம் உணர்வுகளே நம் காதலை மகிழ்விக்கும் போது அதில் காதலியின் பங்கு சிறு அளவே ஆகும் அதை எந்த பெண்ணிடமிருந்தும் நாம்பெற்றுக்கொள்ள முடியும் அதற்கு சிறிய தெளிவு ஒன்று இருந்தாலே போதும் இந்தஉண்மையை காதலில் தோல்வியை கண்டவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் உங்கள் காதலின் காயம் ஆறவில்லையென்றால் கொஞ்ச நாள் காலத்தின்கையில் உங்களை விட்டு விடுங்கள் காலம் உங்கள் காயத்தை மாற்றிவிடும்.
இயற்க்கையிலேயே நம் மனதிலுள்ள நம்முடைய உணர்வுகள் தான் காதலைஇயக்குகின்றது என்பதை புரிந்து கொண்டால் காதலின் வெற்றி எப்படி ஒருமகிழ்ச்சியான அனுபவமோ அதே போல தோல்வியும் விரும்பத்தக்க ஒரு மகிழ்ச்சியானஅனுபவம் தான் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment