flashvortex.

Wednesday, April 4, 2012

இந்தியா மீது சிறீலங்கா விரித்துள்ள புதிய தாக்குதல் களம்

தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு பயிற்சி பெற்ற 150 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறீலங்காவிற்குள் ஊடுருவி உள்ளதாக அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.

மேற்படி செய்தி இந்திய அரசுக்கு கடும் ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக புதுடில்லி இராஐதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேவேளை, தமிழக அரசியல்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் ஊடாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதேவேளை தமிழக பொலிஸ்மா அதிபரும் உடனடியாக மறுத்ததுடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததன் எதிரொலியாக இந்தியா மீது பழி தீர்க்கும் முகமாக சிறீலங்கா திட்டமிட்ட இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புதுடில்லி இராதந்திரிகள் கருதுகின்றனர்.

செய்தியில் அரச புலனாய்வுச் சேவை ஆதாரம் காட்டப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் சிறீலங்கா அரசே இருப்பதாக இந்தியா கருதுகிறது எனவும் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாது என்றும், வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், இந்திய - சிறீலங்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளில் விரிசல் நிலை தோன்றியுள்ளது.

No comments:

Post a Comment