flashvortex.

Sunday, April 22, 2012

பாகிஸ்தானில் மூத்த பத்திரிகையாளர் படுகொலை

பாகிஸ்தானிலிருந்து வெளி வரும் 'டாவ்ன்' பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான முர்தாஷா ரிஷ்வி கராச்சியின் தெற்கே உள்ள நகரமொன்றில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கழுத்து அறுத்துக் கொல்லப் பட்டுள்ளார்.

வியாழன் அதிகாலை  இவர் கொலை செய்யப்பட்டு நகரின் பாதுகாப்பமைச்சின் கட்டடத்துக்கு அருகில் உள்ள மாடி வீட்டின் மேல் மாடியில் போடப் பட்டிருந்தமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவர் தனது பணி நிமித்தமாக கொலை செய்யப்பட்டரா அல்லது சொந்த பிரச்சனை காரணமாக இந்த அசம்பாவிதம் நேர்ந்ததா என இன்னமும் உறுதிப் படுத்த முடியவில்லை. 'டாவ்ன்' பத்திரிகையின் மரியாதை மிக்க மூத்த பத்திரிகயாளராக இவர் நீண்ட காலமாகக் கடமை புரிந்து வந்துள்ளார். இவர் கொல்லப் படும் முன்னர் கைகள் கட்டப்பட்டு காயத்துக்கு உள்ளாக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகும். இங்கு பத்திரிகை நிருபர்களுக்கு இஸ்லாமிய படையினர்,அரசியற் கட்சிகள், ஆயுத தாரிகள் மற்றும் அரச படையினர்கள் ஆகியோரிடமிருந்து எப்போதும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.

கடந்த வருடம் மட்டும் 7 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும், கடந்த ஐந்து வருடங்களுக்குள் மொத்தமாக 29 பத்திரிகையாளர்களும் இதுவரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment