flashvortex.

Sunday, April 22, 2012

ஸ்பெக்ரம் முறைகேடு விவகாரம் : கனிமொழியிடம் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு?

கலைஞர் தொலைக்காட்சிக்கு டெலிகாம் நிறுவனத்திடமிருந்து ரூ.233 கோடி கடன்  எந்த அடிப்படையில் கையாறியது என நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  விளக்கமளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 26ம் திகதி டெல்லியில் உள்ள அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களை அவர் கொடுக்க வேண்டுமென சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வியின் வங்கி கணக்குகள் மற்றும் கடன் பண பரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விபரங்களை அமலாக்க பிரிவிடம் தாக்கல் செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் தற்சமயம் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார்.

இதனால் எதிர்வரும் மே மாதம் 3வது வாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு கனிமொழியிடம் அமலாக்கல் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்பெக்ரம் உரிமம் ஒதுக்கீடு பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் டி.விக்கு இப்பணத்தை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, கலைஞர் டிவியின் பிரதான பங்குதாரர் என்ற வகையில் சி.பி.ஐ வழக்கில் கைதாகி தீகார் சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழி பின்னர் ஜாமினில் விடுதலையாகியிருந்தார்.

No comments:

Post a Comment