flashvortex.

Tuesday, April 3, 2012

எவரும், எமக்கு பாடம் புகட்ட தேவையில்லை : ஐனாதிபதி மஹிந்த காட்டம்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபார்சுகளை நாம் நடைமுறைப்படுத்தவே முயற்சித்து வருவதாக ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு உரிமை கோர சிலர் முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றச் சாட்டியுள்ளார்.

பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலுயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் தேவைகளுக்காக சிலர் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான வெளிச்சக்திகளின் அழுத்தங்களை முறியடிக்க அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எம்மால் உருவாக்கப்பட்டது. எமது அறிக்கையை பறித்துக் கொண்டு அவை தொடர்பில் எமக்கே அழுத்தம் கொடுக்கின்றனர்.

வரலாற்றுக் காலம் முதல் மனித உரிமைகளைப் பேணி வரும் நாடு என்ற ரீதியில் எவரும் எமக்கு பாடங்கள் புகட்ட வேண்டியதில்லை.

எனினும், அரசியல் தேவைகளுக்காக சிலர் நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றனர். வெளிச்சக்திகளின் அழுத்தங்களை முறியடிக்க அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment