flashvortex.

Wednesday, April 4, 2012

ஒசாமாவின் மனைவி, மகளுக்கு பாக்.,கில் ஒன்றரை மாத சிறை

இஸ்லாமாபாத் அல்- குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனின் மூன்று மனைவியர் மற்றும் இரண்டுமகள்கள் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்ததற்காக ஒன்றரை மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த போது கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டு கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மூன்று மனைவியரும், மகள்களும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



இதற்கிடையே அவர்கள் பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஒசாமாவின் மூன்று மனைவியர் மற்றும் இரண்டு மூத்த மகள்கள் ஆகியோருக்கு ஒன்றரை மாத சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் சிறை வைக்கப்பட்டனர். ஏற்கனவே ஒரு மாத காலம் இவர்கள் வீட்டு சிறையில் இருந்து விட்டதால், மீதமுள்ள இரண்டு வார காலத்தை இதே வீட்டில் அவர்கள் கழித்த பின், அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment