flashvortex.

Sunday, April 1, 2012

இந்திய சீன நட்புறவு வருடம் 2012 -இரு நாட்டு தலைவர்களும் பிரகடனம்

2012 ஆம் வருடத்தை இந்தியா மற்றும் சீனாவின் நட்புறவு வருடமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் மற்றும் சீனா ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ ஆகியோர் இணைந்து பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாபதியுடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையின்பின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

இருநாடுகளுக்கும் இடையில் எல்லை விவகாரங்கள் மற்றும் ஏனையவை பற்றி இருதலைவர்களும் கலந்துரையாடியதாகவும்  எல்லைப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது, இந்தியாவில் சீன முதலீடுகளை, குறிப்பாக உட்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைகளில், முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment