flashvortex.

Thursday, April 5, 2012

விற்பனையை 20 மடங்காக்க முயலும் RENAULT !! (வீடியோ)


பிரான்சின் RENAULT மகிழுந்து தயாரிப்பாளர்கள் தமது மகிழுந்து விற்பனையை இந்தியாவில் 2012ல் 20 மடங்காக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இரு புதிய வகை மகிழுந்துகளை அறிமுகம் செய்வதன் மூலம் தாம் இந்திய வாகனச் சந்தையில் நிலையாகக் காலூன்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்தில் 1500 Renault மகிழுந்துகளை இந்திய வாகனச் சந்தையில் விற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 நாங்கள் தாமதமாகத்தான் வந்துள்ளோம். ஆனாலும் காலம் கடந்துவிடவில்லை” என  RENAULT INDIA வின் நிர்வாக இயக்குநர் MARC NASSIF தெரிவித்துள்ளார். 22,500€ பெறுமதியான Premium executive Sedan Fluence டீசல் ரக மகிழுந்தை இந்தியாவில் கடந்த வருடம் விற்பனையில் அறிமுகப்படுத்திய போதே இவ்வாறு தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த பந்தய மற்றும் பொருட்கள் ஏற்றும் வாகனங்களின் தயாரிப்பாளர்களான  Mahindra வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை RENAULT இவ்வாண்டு நிறுத்திக் கொண்டுள்ளது. இம்முறைRENAULT தனித்துக் களத்தில் இறங்கியுள்ளது.




இதன் நிர்வாக இயக்குநர் மேலும் தெரிவிக்கையில் நாம் இந்தியச் சந்தையினுள் மிக வேகமாக நுழைகின்றோம். 15மாத இடைவெளிக்குள் வகை மகிழுந்துகளை அறிமுகப்படுத்துவோம்” என்றுள்ளார். இந்தியச் சந்தையில் ஏற்கனவே GM, TOYOTA மற்றும் ஜப்பானிய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் MARUTI SUZUKI நிறுவனமும் ஏற்கனவே நிலையாகக் கால் ஊன்றி இருக்கையில் RENAULT கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும்.













No comments:

Post a Comment