flashvortex.

Sunday, April 1, 2012

ஜெனீவா பிரேரணை: சிறீலங்கா பாராளுமன்றில் இருநாள் விவாதம்


சிறீலங்காவிற்கு எதிராக ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விசேட விவாதங்கள் நடாத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய ஏப்ரல் மாதம் 3ம், 4ம் திகதிகளில் இந்த விஷேட விவாதங்களை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த விசேட இரண்டு நாள் விவாதங்களின் போது ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக விளக்கங்களும் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் விஷேட விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப் பட்ட யோசனையை அடுத்தே கட்சித் தலை வர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment