flashvortex.

Wednesday, April 4, 2012

அரசின் தற்போதைய செயற்பாடு - நாடு பிளவுபடும் அபயாம்: எச்சரிக்கிறது எதிர்க்கட்சி

சர்வதேச விவகாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல விசனம் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும், தென் சூடான் தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 

அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தவறினால், நாடு பிளவடையக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
ஜனநாயக அமைப்புக்களை வலுப்படுத்தவும், கடத்தல் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment