flashvortex.

Thursday, April 5, 2012

அமெரிக்க செனற் சபையில் சிறீலங்கா விவகாரம்: அதிர்ச்சியில் மஹிந்த அரசு

சிறீலங்கா தொடர்பலான அறிக்கை ஒன்று அமெரிக்க செனற் சபையில் நேற்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், சர்வதேச போர்குற்ற விவகாரங்களுக்கான உயர்நிலை அதிகாரி stephen rapp அவர்களினால் சிறீலங்கா தொடர்பிலான அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில பல நெருக்கடிகளை சந்திந்தித்து வரும் சிறீலங்கா தரப்புக்கு தற்போது அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையானது கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறீலங்காவிற்கு பயணம் செய்து கள ஆய்வினை stephen rapp மேற்கொண்டிருந்தார்.

வங்கதேசத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்களை தற்போது கையாண்டு வரும் stephen rapp அவர்களின் இவ் அறிக்கை, சிறீலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா தொடர்பில் stephen rapp அவர்களினால் சமர்பிக்கபட்டுளள்ள அறிக்கை தொடர்பில் விரைவில் அமெரிக்க செனற்சபையில் விவாதம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment