flashvortex.

Thursday, April 5, 2012

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு ரூ.1.20 கோடி கட்டணம் நிர்ணயித்தது போலீஸ்

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டுமென, காவல் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டி, ஐ.பி.எல்., நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் மனு அளித்திருந்தனர். வர்த்தக நோக்கில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள, கட்டணம் செலுத்த வேண்டுமென, போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு, ஐ.பி.எல்., நிர்வாகிகள் ஒப்புக் கொண்டதால், விரிவான போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு:இணை போலீஸ் கமிஷனர் சேஷசாயி தலைமையில், துணை கமிஷனர்கள் 3, கூடுதல் துணை கமிஷனர்கள் 2, உதவி கமிஷனர்கள் 11, இன்ஸ்பெக்டர்கள் 40, எஸ்.ஐ.,க்கள் 100, மத்திய குற்றப்பிரிவு உட்பட பிற பிரிவுகளை சேர்ந்த 200, ஆயுதப்படைப் போலீசார் 250, நவீன துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் முதல் 12 லட்ச ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளோம். சென்னையில் நடைபெறும், 10 போட்டிகளுக்கு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், ஐ.பி.எல்., நிர்வாகத்திடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்' என்றார்.

"ஓசி' டிக்கெட் இல்லை:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணி பிற நாடுகளுடன் விளையாடும் போதெல்லாம், பாதுகாப்புப் பணிக்கு போலீசார் கட்டணம் நிர்ணயித்ததில்லை. தற்போது நடைபெறும் ஐ.பி.எல்., தனியார் நிகழ்ச்சி என்பதால், போலீஸ் பாதுகாப்பிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலீசார் கட்டணம் நிர்ணயித்துள்ளதால், ஐ.பி.எல்., நிர்வாகம் போலீசாருக்கு இலவசமாக டிக்கெட்டுகளை தரவில்லை. அதனால், பிற போலீஸ் அதிகாரிகளுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுப்பதில், திருவல்லிக்கேணி போலீசார் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment