flashvortex.

Tuesday, April 3, 2012

சிறீலங்காவிற்கு ஆபத்து! எச்சரிக்கும் பிரீஸ்


மேற்குலக நாடுகளினால் சிறீலங்கா மீது இராஜதந்திர ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பொருளாதாரத் தடைகளை விடவும் தற்போதைக்கு இராஜதந்திர ரீதியான அழுத்தங்களின் ஆபத்தே அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் செறிந்து வாழும் நாடுகளில் சிறீலங்கா இராஜதந்திரிகள் மீது பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதன் ஓர் கட்டமாகவே க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு, பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரக உயரதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படலாம் எனவும் அவ்வாறான சவால்களை எதிர்நோக்க தயாராக வேண்டுமெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment