flashvortex.

Thursday, April 5, 2012

ஐனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக, மீண்டும் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு

ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவிற்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரின் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களான காசிப்பிளை மனோகரன், கலைச்செல்வன் மற்றும் ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகியோர் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவிற்கு எதிராக வழக்கு தொடுந்திருந்னர். இவர்கள் சார்பில் சட்டத்தரணி புரூஸ் பெயன் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் நட்டஈடு வழக்குத் தொடுத்திருந்தார்.

ஆனால் இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த மாவட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பரிந்துரைத்ததன் அடிப்படையில் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவிற்கு இராஐதந்திர சிறப்புரிமை இருப்பதாக கூறி வழக்கினை தள்ளுபடி செய்திருந்தது.

எனினும் 30 நாட்களுக்குள் தீர்ப்புக் குறித்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பின் அடிப்படையில், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கொலம்பியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டவாளர் புரூஸ் பெய்ன் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மன்றம் விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment