flashvortex.

Wednesday, April 4, 2012

இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரும் காந்திய பொருட்கள்

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரது உடலிருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்த சிறிய அளவிலான மண், புற்கதிர்கள், மற்றும் காந்தியின் மேலும் சில பயன்பாட்டு பொருட்கள் இம்மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் வைத்து ஏலத்தில் விடப்படவுள்ளன.

இவற்றில் காந்தி பயன்படுத்திய வட்டவடிவான மூக்கு கண்ணாடி, மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட கைராட்டை,  காந்தி ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் எழுதிய கடிதங்கள், அவர் 1946ம் ஆண்டு லண்டனில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பனவும் ஏலத்தில் விடப்படவுள்ளன.

இந்த மாதம் 17ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தினை, பிரபல ஏல நிறுவனமான முல்லாக்ஸ் ஒழுங்கு செய்துள்ளது.

காந்தி பயன்படுத்தியவற்றை விட இந்தியாவை சேர்ந்த இதர அரிதான பொருட்களில் ஒன்றான மகாராஜா ரஞ்சித் சிங்கின் உருவம் வரையப்பட்ட நுண்ணிய ஓவியம் ஒன்றும் ஏலத்தில் விடப்படவிருக்கிறது.

No comments:

Post a Comment