flashvortex.

Wednesday, April 4, 2012

யாழில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லோட் நஸ்பி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ் ஆயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் அபிவிருத்தி, சுகாதாரம், மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்துவதே தமது விஜயத்தின் நோக்கமென லோட் நஸ்பி குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் யாழ் மாவட்டம் துரித வளர்ச்சியைக் காணுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையை மாதாந்தம் பிரித்தானிய தூதரகத்தின் ஊடாக தமக்கு அனுப்பி வைக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் லோட் நஸ்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர், யாழ் மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்து தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

No comments:

Post a Comment