flashvortex.

Sunday, April 1, 2012

மிஸ் இந்தியா வேர்ல்டாக வன்யாமிஸ்ரா தேர்வு


சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா(19) 2012-ம் ஆண்டிற்கான மிஸ்‌ இந்தியா வேர்ல்டு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மும்பை அ‌ந்‌தேரியில் பெமினா நிறுவனத்தின் சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்டு 2012-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி தேர்வு நடைபெற்றது. போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களின் நடை, பழக்க வழக்கம், மற்றும் பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வன்யாமிஸ்ரா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் வென்றதன் காரணமாக இந்தாண்டிற்கான போட்டியில் எவ்வித சுற்றுக்களிலும் கலந்து கொள்ளாமல் நேரடியாக பங்குபெற தகுதிபெற்றார். 


இவரை தொடர்ந்து பிராச்சிமிஸ்ரா, மற்றும் ரோச்லிமரியா ராவ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில் ஆயிரம் வேலைகளை உருவாக்குவது அல்லது ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இதி்ல் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வன்யாமிஸ்ரா ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலம் அவர்‌களின் குடும்பத்திற்கு வாழ்வளி்க்க முடியும் என பதில் அளித்தார். இதில் திருப்தியடைந்த நடுவர்கள் மிஸ்இந்தியாவேர்ல்டு 2012 பட்டத்தை வழங்கினர். தொடர்ந்து பெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை பிராச்சி மிஸ்ராவும், பெமினா மிஸ் இந்தியா இண்டர்நேஷனல் பட்டத்தை ரோச்சிலி மரியா ராவ் பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகியாக தேர்வு பெற்றவர்கள் கிரிடம் சூட்டினர்.
 

No comments:

Post a Comment