flashvortex.

Sunday, April 15, 2012

ஈழத்தில் நாம் கேட்பது வீடு அல்ல நாடு! : காசி ஆனந்தன்


நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்களக் குடியேற்றம் மிக கொடுமையாக தாயக மண்ணில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது ஈழத்தில் ஜம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொல்கின்றார்கள். நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் காசி ஆனந்தன்.



இன்று ஐ.நாவின் மனித உரிமைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒரு நிறைவான அறிக்கை அல்ல ஆனாலும் அமெரிக்கா உலக அரங்கில் முதல் முதல் தமிழர்களின் அந்த மண்ணில் நிகழ்ந்த நிகழ்வினை குறித்த ஒரு கருத்தினை முதன்முதல் ஓங்கி ஒலித்ததால் அது உலக அரங்கில் தமிழர்களின் போர்முனைக்கு ஒரு தொடக்கமாக எங்கோ கதவை தட்டுகின்ற நிகழ்வாக இருப்பதால் நாங்கள் அதனை வரவேற்கின்றோம்.

ஆனாலும் அது முழுமையான அறிக்கை அல்ல. அதற்கு முன்னர் ஐ.நா அறிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலும் இனஅழிப்பு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இந்த அறிக்கையிலும் அவ்வாறு இல்லை. மனித உரிமை மீறல் என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் இந்த தீர்மானம் ஒருசிறிய தொடக்கம் போல தமிழர்களுக்கு பட்டாலும் அதில் பெரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் அமெரிக்கா தன்னுடைய இந்த கருத்தினை மாற்றிக்கொள்ளும் காலம் வரும். இந்த தீர்மானத்தில் பாரிய கொடுமை காணப்படுகின்றது.

இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படுகின்றது. தமிழர் வாழும் நிலப்பரப்பு ஒருதாயகம் அந்த தாயகம் தான் வடக்கு கிழக்கு ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கையில் வடக்கு என்று சுருக்கி சொல்லப்பட்டிருக்கின்றது.

இது ஒரு பாரிய கொடுமை. ராஜீவ் காந்தி உடன்படிக்கையில்கூட தமிழர் தாயகம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment