flashvortex.

Tuesday, April 3, 2012

த.தே.கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

அரசியல் தீர்வு தொடர்பில் சிறீலங்கா அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிவிவகார அமைசச்ர் ஜி.எல் பீரீஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை நாட்டுக்கு வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் பையின் மனித உரிமை பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு வருகைதருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்க இராஜங்க செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். 
 

அவரது அழைப்பினை ஏற்று வெளிவிவகார அமைச்சர் மே மாதம் இரண்டாம் வாரத்தில் அங்கு பயணமாகவிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அமெரிக்காவிற்கு வருகைதருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனிடம் வினவிய போது அதுபற்றி அறிய முடியவில்லை என தெரிவித்தார்.
 
அதேவேளை அமெரிக்க இராஜங்க செயலாளரினால் அவ்வாறான அழைப்பு ஏதும் விடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை என அமெக்காவின் சிறீலங்கா தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.அதன் முன்னேற்றம் என்ன? அரசியல் தீர்வு விடயத்தில் எதிர்கால நகர்வுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் கூட்டமைப்பை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment