flashvortex.

Tuesday, May 29, 2012

சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி



சிறுவர்களின் மனதிலே இருக்கும் எதிர்பார்ப்புக்களையோ எண்ணங்களையோ யாருமே எளிதில் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அவர்களுக்கும் தமது மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.



சிறுவர்களின் உலகம் மிகவும் பெரியது. ஆந்த உலகத்தில் எத்தனையோ விடயங்கள் உட்புதைந்து இருக்கின்றன. சாதாரணமாக சிறுவர்களுடன் உரையாடும் போது இதனை நன்றாக நாம் புரிந்து கொள்ளலாம். பெரியவர்களுக்கு அவர்களின் விடயங்கள் சிறியதாக இருந்தாலும் அவர்களின் உலகத்தில் அந்த  விடயம் மிகவும் பெரியது.

சிறுவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை முதல் முறையாக வெளிக் கொண்டு வந்தது 'எனது உலகு' கண்காட்சி. சிறுவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வளழமையாக உள்ளதை உள்ளவாறே புகைப்படங்கள் கண்காட்சியாக நடைபெறுவது வழக்கம். இதற்கு மாறாக 3 தொடக்கம் 5 வரை இருக்கும் சிறுவர்களினால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவற்றை அப்படியே காட்சிப்படுத்தாமல் அந்தப் புகைப்படத்தில் சிறுவர்களினால் வரைகலை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. புகைப்படங்கள் எல்லோருக்குமே கதைகள் பலவற்றை சொல்லும். அதிலே வரைகலையும் செய்து காட்சிப்படுத்தும் போது எத்தனை கதைகள் சொல்லும் என்பதை சொல்லவா வேண்டும்.

ஏதிர்காலத்தை கட்டி எழுப்புவது சிறுவர்கள்தான். வரும்காலத்தில் தமது கிராமம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்த 'எனது உலகு' கண்காட்சி மூலம் மறுவன்புலோ சிறுவர்கள் எடுத்துக்காட்டி இருந்தனர்.

மறுவன்புலோ கிராமம் மீள்குடியேற்றப்பட்ட கிராமம் ஆகும். நாட்டில் இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் அங்கிருந்த மக்கள் 1995ம் ஆண்டுகளில் இக் கிராமத்தைவிட்டு வெளியேறி தற்போது கடந்த ஆண்டு ஆவணிமாதம் தமது சொந்த கிராமத்துக்கு மீள் குடியேறி உள்ளனர். இந்த கிராமம் மிகுந்த வறட்சியுடனும் ஆங்காங்கே வீடுகளுடனும் குடிப்பதற்கு நன்னீர் இல்லாமலும் இருக்கின்றது.

தமது கிராமம் சோலைகளுடனும்; அருகருகே வீடுகளுடனும் கோயில்களுடனும் இருக்கவேண்டும் இக்கிராம சிறுவர்கள் புகைப்படத்தில் வரைகலை செய்து இந்த சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டியிருந்தனர்.



அவர்களின் இவ்வாறான எண்ணங்களை வெளிக்கொண்டு வந்தது 'SDC' நிறுவனத்துடன் இணைந்து யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய மாணவர்கள்தான்.  இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களின் புகைப்பட ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் மறுவன்புலோ சகலகலா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களினால் பயிற்சிப்பட்டறை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.அதிலே சிறுவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு அவர்களின் எண்ணங்களுடன் வரைகலை செய்து காட்சிப்படுத்தப்பட்டன. இந்த செயற்பாடு மக்கள் மததியில் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்காட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள்.....இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. சிறுவர்களின் மனதிலே இருக்கின்ற விடயங்களை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான கண்காட்சிகளை மேலும் நடாத்தவேண்டும். இதன் மூலம் மறுவன்புலோ சிறுவர்கள் எப்படி தங்கள் கிராமம் இருக்கவேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர்களின் ஆற்றலை மேலும் வளர்க்க உதவுகின்றது என்றனர்.

சிறுவர்களின் மனதிலே இருக்கும் விடயங்களை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வழி ஆகும். இதற்கு ஆரம்பப்புள்ளியை இட்டு வைத்திருப்பது 'SDC' நிறுவனமும் யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையமும் என்றால் மிகையாகாது.

No comments:

Post a Comment