flashvortex.

Tuesday, October 23, 2012

மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வு மீளாதா??



நாட்டில் நடந்த யுத்தத்தின் பிறகு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றநிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ வேண்டிய சுழலுக்கு ஆளாகியுள்ளனர் அவ்வாறான ஒரு நிலையிலேயே தீவுப்பகுதி மக்களும் வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.



தீவுப்பகுதி மக்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் கிடைக்கின்ற என்று கூறும் கருத்து எந்தளவு தூராம் உண்மை என்பது இன்றைய காலத்தில் கேள்விக்குறியாக மாறி வருகின்றது.

காரைதீவு ஊரி மக்கள் மீள்குடியேறிபின்னும் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமது அரசியல் ஆட்சிக்கு இப்பகுதி மக்களின் அதிகளவான வாக்குகளை நம்பியிருக்கும் அரசியல்வாதிகள் ஏன்இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி வலுப்பெறுகின்றது.

நடந்து முடிந்த போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 2009ம் ஆண்டு தமது சொந்த இடத்துக்கு திரும்பியுள்ளனர்.  சொந்த இடத்துக்கு வந்த சந்தோசத்தின் மத்தியில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்ப்பட்டடு வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க தம் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு ஏற்ற வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேறும் போது ஒருஅரசியல் கட்சியினர் மட்டும் குடும்பத்திற்கு தல 50000ரூபாவை  கொடுத்து விட்டு அப்படியே விட்டுவிட்டனர். இந்தக்காலத்தில் இவர்களின் காசு எதற்கு காணும்? இவர்கள் இருப்பதற்கு வீ;டுகளை கட்டுவதா அல்லது மலசலகூடங்களை கட்டுவதா அல்லது கிணறுகளை கட்டுவதா? என்பது கேள்விக்குறியாகும்.

நகரத்தில் கட்டங்கள் வானளாவிய ரீதியில் வளர்ந்து கொண்டிருக்க இவர்களின் வாழ்வு குடிசையிலேயே போகின்றது. ஒரு சில மக்கள் கல்வீடுகளில் வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களுக்கு மலசலகூட வசதிகளோ கிடையாது. ஏத்தனையோ மக்கள் அரைகுறையான வீடுகளை கட்டி முடிப்பதற்கு பணம் இல்லாமல் அல்லல்ப்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அன்றாட தேவைகளுக்கு கூலி வேலையினையும் கடல்தொழிலினையும் நம்பி இருக்கும் இவர்கள் எவ்வாறு தமது தேவைகயை பூர்த்தி செய்து கொள்வார்கள். இவர்களின் வாழ்வினை பார்த்தால் தீவுப்பகுதி மக்கள் செல்வந்தர்கள் என்ற கருத்து உண்மையானதா? என்பது சந்தேகத்துகுரியதாகின்றது.

இக் கிராம மக்களின் முக்கிய பிரச்சனைகளில் தண்ணீர் பிரச்சனையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமக்கு தேவையான தண்ணீரினை பணம் கொடுத்தே வாங்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இவர்கள் வாழ்கின்றனர். குடா நாட்டில் தண்ணீருக்கு பஞ்சமில்லை என்ற கருத்து எல்லோர் இடத்திலும் இருக்கின்ற நிலையில் இவர்கள் பணத்தினை கொடுத்தே தண்ணீரை பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளனர். இக் கிராமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் குளிப்பதற்கு மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர். நீண்ட தூரம் சென்றே குளிக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு. அதிலும் பெண்கள் இரவு நேரங்களிலேயே பொதுக்கிணறுகளில் குளிக்க வேண்டிய நிலைக்கு ஆள்பட்டுள்ளனர்.

இவை ஒரு புறம் இருக்க போக்குவரத்து பிரச்சனைகளும் இக் கிராம பிள்ளைகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இக் கிராமத்தில் 100 தொடக்கம் 150 பிள்ளைகள் வரை தமது கல்வித் தேவைகளுக்காக நீண்ட தூரம் பாடசாலைக்கு செல்கின்றனர். ஆனால் காலையில் இவர்களை ஏற்றிச் செல்லும் பஸ் பாடசாலை முடிந்த பிறகு இவர்களை ஏற்றச் செல்வதில்லை. இதனால் மாணவர்கள் நீண்ட தூரம் நடந்தே  தமது வீடு வரவேண்டியதினால் மாணவர்கள் கிழமையில் 2 நாட்களும் பாடசாலை செல்கின்றனர். கடந்த  5,6 மாதங்களாக மாணவர்கள் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
பல தரப்பட்ட பிரச்சனைகளை எதிர் நோக்கியிருக்கும் இக்கிராம மக்களின் வாழ்வு விடியாதா? மாணவர்கள் சிரமமின்றி பாடசாலை செல்வார்களா? இவர்களின் தேவையினை கவனத்தில் கொள்ள யார் முன் வருவார்கள்?  

No comments:

Post a Comment