flashvortex.

Tuesday, May 29, 2012

இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??




நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.

இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.



இன்று எத்தனையோ ஊடகவியலாளர்;கள் தமது உயிரை இழந்துள்ளனர்.பாதுகாப்பாக வாழமுடியாமல் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர்.

குகநாதன் தாக்கப்பட்டபோது அவருக்காக நடாத்தப்பட்ட பேரணியில் ஊடகசுதந்திரம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார்கள். இன்று ஊடகசுதந்திரம் இருக்கின்றது என்று கூறி மே மூன்றாம் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது.ஆனால் ஊடக சுதந்திரம் என்பது பெயரளவிலேயே மட்டும் காணப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்றால் ஊடகவியலாளர்கள் ஏன் தாக்கப்படுகின்றார்கள்? அவர்கள் ஏன் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியாமல் உள்ளது?

ஒருவரை ஆக்குவதும் அழிப்பதும் உச்சத்தில் ஏற்றி விடுவதும் தாழ்த்துவதும் ஊடகவியலாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது.இதனால்தான்  அன்று நெப்போலியன் அவ்வாறான வார்த்தைகளைக் கூறினார்.ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றி அமைக்கும் வலிமை ஊடகத்திற்க்கு இருக்கின்றது என்றால் மிகையாகாது.பேனா முனைமூலம் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகவியலாளர்களின் பெறுமதியை யார் உணருகிறார்கள்? அதைவிட அவர்களை அழிப்பதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் தினம் ஒன்று இருக்கின்றது என்று இன்னைய தலைமுறையில் எத்தனை பேரிற்க்குத் தெரியும்? அப்படித் தெரிந்திருந்தாலும் அவர்களது எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணமுடியும்.

1991ஆம் ஆண்டில் இருந்து ஊடகத்திற்கென சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிடுகின்ற போதிலும் இன்ற பெயரளவில் மட்டுமே  காணக்கூடியதாக இருக்கின்றது.

இச்சூழ்நிலையில் உலக ஊடக தினம் அர்த்தமுள்ளதா? ஏன்பது சந்தேகத்திற்குரியதே.

எது எவ்வாறு இருப்பினும், ஊடகவியலாளர்களினால் பல நன்மைகளை நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்கமுடியும் என்பது மறுக்க மற்றும் மறைக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment