flashvortex.

Tuesday, October 30, 2012

புத்துயிர் பெற்றுவரும் நெசவுக் கைத்தொழில்



ஆடைகள் உடுபிடவைகள் போன்றவற்றிற்கு இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாமே தமது ஆடைகளை நெய்து உடுத்த வரலாறுகள் உண்டு. அன்றைய காலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த நெசவுக் கைத்தொழில் இருந்துள்ளன.



1970 களில் நெசவுக் கைத்தொழிலானது மிகவும் வலுப்பெற்று இருந்தது.இந்தக் காலகட்டத்தில்; அதிகமான நெசவுத்தொழிலாளர்களும் நெசவு நிறுவனங்களும் இருந்தன. ஒவ்வொரு  வீட்டிலும் ஒவ்வொரு தறியாவது இருக்கும். ஆனால் இவை எல்லாம் அந்தக்காலம் என்று சொல்லும் அளவுக்கு இந்த நெசவுக் கைத்தொழிலானது வீழ்ச்சி கண்டிருந்தது. மீண்டும் இந்த நெசவுக் கைத்தொழிலை துளிர்க்க விட்டிருந்தது அரசாங்கம்.

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நெசவுக் நிறுவனங்களை நிறுவி பல தொழிலாளர்களுக்கு பயிற்சியை வழங்கி வருகின்றனர் 'இன்று யாழ்ப்பாணத்தில் மட்டும் 31 நெசவு நிறுவனங்கள் இருக்கின்றன. அதிலே 29 நெசவு நிறுவனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சராசரியாக 10பேர் இத் தொழிலை பயின்று வருகின்றனர். மொத்தமாக 290பேர் பயில்கின்றனர்இ இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 200ரூபா கொடுக்கின்றனர்;. அரசாங்கமும் நெசவு கைத்தொழிலை வளாப்பதற்குதான் ஊக்குவிக்கின்றது. நூலுக்கான வரிப்பணத்தை 100ரூபாவாக குறைத்தும் இருக்கின்றது. ஆனாலும் நூல் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் நெசவுக் கைத்தொழில் வளர்ச்சி அடையவில்லை.

ஆரம்ப காலங்களில் மட்டக்களப்பில் இருந்தே நூலுக்கு சாயம் இட்டு எல்லா நெசவு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் வடமாகாணம் வடக்குகிழக்காக பிரிந்ததில் இருந்து நூலுக்கு சாயம் இடுவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டதனால் தற்போது வவுனியாவில் உள்ள ஒருவரே சாயம் இட்டு; அனுப்புகின்றார். இந்த நூலினையே எல்லா இடங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெசவுத் தொழிலை வளர்ப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும்  எடுத்துக் கொண்டாலும் அதற்கான நூல் பற்றாக்குறையினபல் இத் தொழில் குறைவாகவே நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தின் காலநிலைக்கு பருத்தித்துணியையே உடுத்திக்கொள்ள மக்களும் விரும்புவார்கள். அதற்கான சந்தர்ப்பங்களும் நிறைய உண்டு. நெசவுத் தொழிளாளர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றால் போல ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் போது நெசவுத்தொழில் மேலும் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்.

29 நிறுவனங்களில் 290 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் நடைபெற்றாலும் 25 பயிற்றுனர்களே இருக்கின்றார்கள். இத்தொழிலினை மேற்பார்வை செய்வதற்கு இதுவரை நிரந்தர கண்காணிப்பாளர்கள் எவரும் இல்லை. மூன்று தற்காலிகமான மேற்பார்வையாளர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970, 80 காலப்பகுதியில் நெசவுக் கைத்தொழில் வேலை செய்த கரவெட்டியை சேர்ந்த பாலசிங்கம் கூறுகையில் 'அப்பொழுது இதுதானே தொழிலாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து ஒன்றாக தொழிலுக்கு செல்லோம். அதன்பிறகு தொழிலும் முடங்கிவிட்டது. இப்போது இந்த தொழலினை செய்பவர்கள் குறைந்துவிட்டார்கள்' என்றார்.

தொழில்  நிமிர்த்தம் ஆரம்பிக்கப்பட்ட இக் கைத்தொழில் கல்வி நெறியாக வளர்ச்சி அடைந்தமை இதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
தொழில் வாய்ப்பு இல்லை என்று உள்ளுர் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் சிறிதளவு பணத்தை முதலீடு செய்து நெசவுத்தொழிலில் நவீனத்துவத்தை புகுத்தும் போது இத் தொழிலின் உயர்வு மேலும் விருத்தியாகும். இதனை வருமானம் ஈட்டும் தொழிலாக எல்லோரும் பார்க்கும் போது தனியார் நிறுவனங்களும் நெசவுக் கைத்தொழிலில் கால் பதிக்கும் என்பது திண்ணம்.  எது எவ்வாறு இருப்பினும் நெசவுக் கைத்தொழில் யாழ்ப்பாணத்தில் மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment