flashvortex.

Tuesday, May 29, 2012

ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.


பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.

பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.



இவர்களுக்கான வாழ்விட வசதிகளை பல தனியார் நிறுவனங்களான தென்னிந்திய திருச்சபை, போரூட், அலைன்ஞ், கெக்டப், ;யுடினட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. இதில் அலைன்ஞ் நிறுவனம் கட்டிக் கொடுத்த வீடுகள் இன்னும் பூரணமாக முடியவில்லை என இப் பகுதி மக்கள் தெரிவித்தகர். இதனால் இக் கிராமத்தில் வசிக்கும் 58 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் இன்றியும் 60 குடும்பங்கள் கிணறு வசதிகள் இன்றியும் சிரமப்பட்டு வருகின்றன.

வீடு ஒன்றுக்கு அடிப்படை வசதிகள் என்பது முக்கியமானதொன்றாகும். கிணறு வசதிகளைவிட மலசலகூட வசதிகள் மிக முக்கியம். ஆனால் அவைஇன்றியே இக் கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அலைன்ஞ் நிறுவனத்தோடு  நீங்கள் தொடர்பு கொள்ளவில்லையா? என்று கேட்ட போது  தும்பளைக்கிழக்கு கிராமத்தைத்சேர்ந்த தயாளன் கூறுகையில் 'அலைன்ஸ் நிறுவனம் வீடு கட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நாளிலே இடையில் விட்டு சென்றுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக எந்த வித தொடர்பும் இருக்கவில்லை. இதனால் பத்திரிகையில் செய்திகளை வெளியிட்ட பின்னார் மீண்டும் வந்து குறையாக இருந்த வீட்டை முடித்து தருகின்றோம் என்றார்கள். சொன்னது மட்டும் தான் மீண்டும் எந்த வித தொடர்பும் இன்றி சென்று விட்டனர்'. என்று கூறினார்.

இங்கு இருக்கின்ற வீடுகளை பாருங்கள் கிணறும்இல்லை, மலசலகூடமும் இல்லை இப்படி எத்தனை வீடுகள் இருக்கின்றது. ஏன்று கூறிய படி கிராமத்தில் வசிக்கும் துரையப்பா அன்னலிங்கம் வந்தாhர். 'சுனாமிக்கு முன்பு எங்கள் வீடுகளிலும் எல்லா வசதிகளுடனும் தான் இருற்தது. தற்போது எதுவும் இல்லை கிணறு, மலசலகூடம் இல்லை என்றால் கஸ்ரம் தானே. ஏங்களுடைய குடும்பம் கடற்தொழிலையே நம்பியுள்ளது. செய்கின்ற தொழில் எனண்ணெய் காசக்கு போய்விடுகின்றது. சுhப்பாட்டிற்கே கஸ்ரம் இப்படி இருக்க எவ்வாறு நாம் கிணற்றையும் , மலசலகூடத்தையும் கட்டுவது' என்று கேள்வி எழுப்பினார்.

இதே கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய தீபனா தயாளன் கூறுகையில் 'நாங்கள் 05 பேர் எங்களுடைய வீட்டுக்கும் கிணறும், மலசலகூடமும் இல்லை பக்கத்து வீட்டுக்கு தான் செல்வோம். 3,4 மாதங்களுக்கு முன்பு iஉசஉ நிறுவனம் பார்த்து கிணறு மலசலகூட வசதிகள் இல்லாதவர்களின் தொகையை எடுத்துச் சென்றுள்ளார்கள். எங்கட கஸ்ரங்களை iஉசஉ நிறுவனமாவது தீர்த்து வைக்குமா' என்ற ஏக்கத்துடன் கூறி முடித்தார்.
ஒரு வீட்டிற்கு மலசலகூடம் இல்லை என்றால் எவ்வளவு கஸ்ரம் என்று எங்களின் வாழ்க்கையில் நீங்கள் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் என்ற கருத்தை முன் வைத்தாh இக் கிராமத்தின் கடற்தொழிற் சங்க தலைவர்  விஸ்ணுதாஸ். 'மக்கள் என்னிடம் வந்து கதைத்தார்கள் நானும் கதைக்கவேண்டியவர்களுடன் எல்லாம் கதைத்து விட்டேன் ஆனால் எந்த பிரியோசனமும் தெரிவதாக இல்லை. இப்போது iஉசஉ நிறுவனம் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளது. வசதிகள் இல்லாத வீட்டிற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதாவது 58 வீட்டிற்கு மலசலகூடம் இல்லை. ஆனால் சுனாமி வந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரேஒரு வீட்டில் மட்டும்தான் மலசலகூடம் இருந்தது. அந்தக்காலப்பகுதியில் தான் பெரிதும் சிரமப்பட்டோம். கடலுக்குள் மலசலம் கழித்தவர்களும் வீடுகளுக்கு அப்பால் மலசலம் கழித்தவர்களும் அதிகம் என்று கூறியவரை இடை மறித்து
' கடலுக்குள் தற்போதும் இப்படியான காரியங்களை மக்கள் செய்கின்றார்களா?' என்று கேட்ட போது... தற்போது விரும்பத்தகாத காரியங்கள் செய்வது குறைந்துவிட்டது.அவ்வாறு அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவோருக்கு ஐந்நூறு ரூபா தொடக்கம் ஆயிரம் ரூபா வரை குற்றப்பணம் அறவிடப்படும். எங்கள் கடற்கரைக்குச் சுற்றுலாப்பயணிகள் வருகைதருகின்றனர். அதனால் கடற்கரையை அழகாக வைத்திருப்பது எங்கள் கடமை ஆகும்.இப்படியான காரியங்கள் நடைபெறுவதை நாம் யாரும் விரும்புவதில்லை' என்றார்.

'பக்கத்துவீட்டிற்கு இரவு நேரங்களில் சென்றால் முகம் சுழிப்பார்கள்' என்றார் இக்கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயதான நரேஸ் சந்திரவாணி. 'எங்கட வீடும் அலைன்ஸ் நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழுள்ள வீடுதான்.அதான் இன்னும் வீடு கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது.வீடே முழு மனையாக முடியவில்லை.மழை காலங்களில் அன்றாட வேலைகள் செய்வதிலும் தூங்குவதும் கஸ்ரம்.வீடு முழக்கத் தண்ணீர் வந்துவிடும். இருப்பதற்கே கஸ்ரம். குடிப்பதற்கு,குளிப்பதற்க்கு மற்றும் பிற தேவைகளிற்கான நீரை பக்கத்து வீடுகளில் இருந்தே பெறக்கூடிய நிலைமையில் இருக்கின்றோம். இதற்காக எத்தனை தடவை பேச்சு வேண்டி இருக்கறேன். அதுவும் நான் ஒரு பெண்.ஆண்கள் போல பொதுக்கிணற்றில் குளிக்கவா முடியும்? என்றார் மிக மனவேதனையுடன்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஒரு புறம் இருக்க எமது கிராமத்துக் கடற்கரையில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் எமது கிராமம் நீருக்குள் மூழ்கும் நிலைக்கு நாளுக்குநாள் வந்துகொண்டிருக்கிறது.' ஏன்று கூறினார் தும்பளை கிழக்கு கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்ணுதாஸ்.

'சுனாமிக்குப் பிறகு கடல் மாரி காலத்தில் முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறது. சுனாமி அடிப்பதற்கு முன்பு எங்கோ இருந்த கடல் தற்போது எமது கிராமத்தை நோக்கி ஊடுருவிக் கொண்டிருக்கிறது. எமதுகிராமக் கடற்கரையின் ஓரத்தில் மணல்மண் மட்டுமே உள்ளது.பாறைகள் எதுவும் இல்லை.மணலை நீர் அடித்துக் கொண்டே செல்கின்றது. 'யூசி' எனும் நிறுவனம் தடுப்பு மதில் கட்டுவதற்கு பணம் ஒதுக்கியுள்ளது. அவர்கள் தற்போது கொட்டடிப் பகுதியில் தடுப்பு மதிலைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக ;கிராமத்திற்க்குத் தற்போது தடுப்பு மதில் தேவையே இல்லை .ஏனெனில் அவர்கள் பகுதியில் இருக்கும் கடலில் பாறைகள் இருக்கின்றமையினால் மண்ணரிப்பு ஏற்படாது. ஆனால் எமக்கு அப்படி அல்ல.எங்களுக்குத் தடுப்புச்சுவரை வேகமாக கட்டித்தந்து எமது கிராமத்தை மண்ணரிப்பில் இருந்து விடாமல் கூறிமுடித்தார்.

இக்கிராமமக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் பாரிய பிரச்சனையாக மாறியுள்ளது. 'கடலை விட மோசம் இந்த குளம்' என்றார் 80 வயது மதிக்கத்தக்க முதியவரான ஆறுமுகம் இராமச்சந்திரன். 'என் அப்பா, தாத்தா காலத்தில் இருந்து இப்பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது.மழைகாலத்தில் இக்குளத்தில் நீர் தேங்கிவிடும்.எல்லாக் கழிவுகளும் இந்நீரோடுதான். மாரி காலத்தில் இருக்கவும் முடியாது. இந் நீரில்  நுளம்புகளின் பெருக்கவும் அதிகம். மழைகாலத்தில் சும்மாவே இருக்கமுடியாது. இதில் நுளம்பும் சேர்ந்து கொண்டால் சொல்லவே தேவை இல்லை என்று கூறினார்.

இப் பிரச்சனை தொடர்பாக ஒருவரிடமும் தெரிவிக்கவில்லையா என கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்ணுதாசைக்  கேட்டபோது ' சுகாதாரப்பிரிவில் இருந்து எல்லோரும் பார்த்துவிட்டுதான் சென்றுள்ளார்கள் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. எங்களால் முடிந்தளவு மண் குப்பைகள் போட்டு மூடிவிட்டோம். ஆதற்கு மேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. எங்கள் கிராமத்தை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை சிரமதானம் செய்து கொண்டுதான் இருக்கின்றோம். இவற்றை ஒன்றுமே செய்யமுடியாதுள்ளது என்று தெரிவித்தார்.

அக் குளத்தில் எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்களே நிரம்பி இருந்தது. இது மழைகாலத்தில்  இந்த குப்பைகள் நீருடன் கலக்கின்றது. இவை அனைத்தும் அங்கிருக்கும் பொதுக்கிணற்றில் கலப்பதனால் மாரிகாலங்களில் பொதுக்கிணற்றை யாரும் பயன்படுத்துவது கிடையாது. அதைவிட இப் பொதுக்கிணறு உடைந்த நிலையிலேயே உள்ளது. சுகாதார திணைக்கள அதிகாரிகள் குப்பைகளை போட்டு எரியுங்கள் கிணற்றையும் மூடிவிடுங்கள் என்று கூறியதனால் இக் கிராம மக்கள் மண்ணைப்போட்டு இயன்றளவு இக் கிணற்றை மூடி வருகின்றனர்.

இக் கிராம மக்கள் எத்தனை பிரச்சனைகளுடன் தான் வாழ்கின்றார்கள். இவர்களின் பிரச்சனைகளில் தெருப்பிரச்சனைதான் தற்போது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மழைகாலங்களில் இக் கிராமத்துக்கு பயணம் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவி வந்துள்ளது. ஏனெனில் எல்லா இடங்களிலிலும் இருந்து வரும் தண்ணீர் இவர்களின் கிராமத்தின் வழியாலேயே கடலை அடைந்து கொண்டிருந்தது. இதனால் கிராமமே நீரில் மூழ்கி விடும். அந்த நேரங்களில் உதயசூரியன் சனசமூகத்தையே மக்கள் தஞ்சமடைவார்கள். மழைநீரை வெட்டி விடும் வரை மக்கள் தமது அன்றாட தேவைகளை செய்து முடிக்க மிகுந்த சிரமம் அடைந்திருந்தனர். இதற்கு முடிவு வந்தாற்போல வீதிகளுக்கு 'ஸ்லோன்பைப்' வைத்து கொங்கிறீட் வீதிகளை வழமைக்கு மாறாக ஆறு இஞ்சி உயர்த்தி வீதிகளை போட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த மாரி காலத்தில் இக் கிராம மக்கள் சிரமம் இல்லாமல் வீதிகளில் பயணிக்கின்றார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும.;

இவர்களின் பிரச்சனைகள் முடிவிற்கு வரவில்லை என்றால் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தில் இருந்த மதுபான கடையை ஒழித்தது போல எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால் தானோ இவர்களின் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வீதிப்பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் மக்கள் மற்றைய பிரச்சனைகளிலும் இருந்த மீண்டு வருவார்களா என்பது சந்தேகமே.


       


No comments:

Post a Comment