flashvortex.

Sunday, June 3, 2012

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படம்


பாவம் குறுந்திரைப்படமானது இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை மனோ பிக்சர்ஸ் தயாரித்திருக்கின்றனர். 
இவர்கள் ஏற்கனவே அவசரம் என்ற ஓர் குறுந்திரைப்படத்தினையும் தயாரித்திருக்கின்றனர். பாவம் குறுந்திரைப்படத்தினை ம.கஜதீபன் இயக்க அபிராமன் இசையமைத்திருக்கின்றார். ஓர் அனாதைச் சிறுவனுக்கும் ஓர் இளைஞனுக்கும் உள்ள தொடர்பினை சித்தரிக்கும் விதமாக இத்திரைப்படம் அமைந்திருக்கின்றது.

கடந்த 20.05.2012 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் பாவம் குறுந்திரைப்படத்தினை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் கௌரவ.திரு.மனோகணேசன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். இக்குறுந்திரைப்படத்திற்கு வசந்தம் TV மற்றும் வசந்தம் FM ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

அதன் தொடர்ச்சியாக இக்குறுந்திரைப்படத்தின் அறிமுக விழா விரைவில் வவுனியாவிலும் அதனைத்தொடர்ந்து யாழ் மண்ணிலும் இடம் பெறவிருக்கின்றது. இங்கு நீங்கள் இக்குறுந்திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினைக் காணலாம். இக்குறுந்திரைப்படத்தின் முகப்புத்தக பக்கத்தில் படம் பற்றிய செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.









No comments:

Post a Comment